மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரச்சார தினம் அனுசரிக்கப்பட்டது. இதை, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி தொடங்கி வைத்தார். சுகாதரா ஆய்வாளர் முருகன் பொதுமக்களுக்கு விளக்கி காட்டினார். இதில், வருவாய். ஆய்வாளர் மீனாட்சி, பேரூராட்சி வரிதண்டல் கிரண்குமார் இளங்கலை பூவியல் வல்லுனர் ரவி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.