தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா 5-ம் கட்ட தடுப்பூசி முகாம் – ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராம மக்கள்..

மதுரை – கொரானா வைரஸை ஒழிக்க பொதுமக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு தடுப்பூசி உட்பட பல்வேறு விதமான நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் சிலர் விழிப்புணர்வு இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். கொரானா வைரஸை ஒழிக்க தடுப்பூசி எவ்வளவு முக்கியம் என்பதை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பூசி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று தமிழகம் முழுவதும் ஐந்தாம் கட்ட மெகா கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வசதியாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு  குலுக்கல் முறையில் சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகளை அறிவித்தது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட பெருங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் பத்மா முருகேசன் தலைமையிலும், சின்ன உடைப்பு அருகே குசவன்குண்டு பஞ்சாயத்துக்குட்பட்ட பாப்பனோடை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிவேல் தலைமையிலும் வலையங்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துப்பிள்ளை பெருமாள் தலைமையிலும் நடைபெற்ற மெகா கோவிட் 19 தடுப்பூசி முகாமில் கிராம மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

மேலும் சோளங்குருணி, பனையூர், சாமநத்தம், கொம்பாடி, பெரிய ஆலங்குளம்,நல்லூர், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, நெடுங்குளம்,கழுவன்குளம் காஞ்சிரங்குளம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கிராம மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். திருப்பரங்குன்றம் ஒன்றிய சுகாதார மேற்பார்வையாளர்கள் தங்கசாமி, கிருஷ்ணவேணி, முத்துவேல் உட்பட சுகாதார அலுவலர்கள் முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »