ஒட்டன்சத்திரத்தில் ப.ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா.

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே புதிதாக அமைந்துள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் சங்கத்தலைவர்  கே.டி. தங்கவேல் திறந்து வைத்தார். பின்னர் நடந்த குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் சூப்பர் டெக்ஸ் செல்வராஜ் காந்திமதி,  ஒட்டன்சத்திரம் நகர வர்த்தகர் சங்கத் தலைவர் அம்மன்  சுப்பிரமணி, மனவளக்கலை மன்ற தலைவர் துரைசாமி, துணைத்தலைவர் பூரணச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பெரியசாமி, மற்றும் காந்தி சேவா சங்கத்தினர்,  என்.பி மருத்துவமனை   குழுமம் அனுராதா சுரேஷ் உள்ளிட்டோர்  குத்து விளக்கேற்றினர்.            

மேலும் ஷோரூமின் முதல் விற்பனையை ஒட்டன்சத்திரம் நகர வர்த்தக சங்க தலைவர் அம்மன் சுப்பிரமணி துவங்கி வைக்க சூப்பர் டெக்ஸ் செல்வராஜ் காந்திமதி செல்வராஜ் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் ராமராஜ் காட்டன் மக்கள் தொடர்பு அலுவலர் நாராயணன் வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »