காஞ்சீபுரம் – காஞ்சீபுரம் அருகே கருக்குப்பேட்டையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.கோகுலஇந்திரா, காமராஜ், பெஞ்சமின் ஆகியோர் கழக அரசின் சாதனைகளை எடுத்து கூறி
இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்குகளை சேகரித்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு, போட்டியிடும் மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகி எஸ்.எஸ்.ஆர்.சத்யா மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாலாஜாபாத் அடுத்த கருக்குபேட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.கோகுலஇந்திரா, காமராஜ், பெஞ்சமின் ஆகியோர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், திறந்த ஜீப்பில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கழக அரசின் சாதனைகளை எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் நாயக்கன்குப்பம் என்.ஆர்.பழனி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் தென்னேரி என்.எம்.வரதராஜூலு, மாவட்ட அதிமுக நிர்வாகி மார்க்கெட் வாலாஜாபாத் அரிக்குமார் , நிர்வாகிகள் அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ், அக்ரி கே.நாகராஜன், எஸ்.வெள்ளேரியான், ஒ.வி.ரவி, டி.சி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.