முத்தியால்பேட்டையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பிரேமா ரஞ்சித்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு….

காஞ்சீபுரம் – முத்தியால்பேட்டையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பிரேமா ரஞ்சித்குமார் பொதுமக்களிடம் தென்னை மரம் சின்னத்திற்கு தீவிர வாக்குகளை சேகரித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 


முத்தியால்பேட்டை மற்றும் களியனூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக தென்னை மரம் சின்னத்திற்கு போட்டியிடும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், ஆன்மீக பிரமுகருமன முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமாரின் துணைவியார் பிரேமா ரஞ்சித்குமார்,  மற்றும் முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ஊராட்சி செயலாளர் பி.அன்பழகன் ஆகியோர் முத்தியால்பேட்டை ஊராட்சியில் கிராமம் கிராமமாக வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்களாக வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அப்போது, வேட்பாளர்களை ஆதரித்து  முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் மக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் :முத்தியால்பேட்டை ஊராட்சியில் சமுதாய கூடம், புதிய நூலகம் புதியகட்டிடத்தில் கட்டித் தருவேன். மேலும் குடிநீர், தரமான சாலை, முதியோர் உதவித் தொகை, ரேசன்கார்டு,தெரு விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் செய்து தர பாடுபடுவேன்.
களியனூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான களியனூர் ஊராட்சியில் புதிய சமுதாயமும், நிரந்தர பஸ் வசதியான காஞ்சிபுரம் பஸ்நிலையத்திலிருந்து, பூக்கடைசத்திரம், பழைய ரயில் நிலையம், வையாவூர், களியனூர்பஸ் நிறுத்தம் வழியாக முத்தியால்பேட்டைக்கு தினமும் 10 முறை வந்து செல்ல பஸ் வசதி செய்துதரப்படும். அனைத்துசாலைகளும் புதியதாகஅமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.


மக்களுக்காகவே சேவை செய்து வருகிறேன். மீண்டும் உங்களுக்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குபோட்டியிடும் ஆர்.பிரேமா ரஞ்சித்குமாரையும், முத்தியால்பேட்டை ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்குபோட்டியிடும் பி.அன்பழகன் ஆகியோரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்துவெற்றி பெற செய்யுமாறு அவர் வேண்டி கேட்டுகொண்டார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வி.ஜோதியம்மாள், வக்கீல் ஆர்.வி.உதயன், பன்னீர்,டெல்லி, மதன், உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »