விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் பிறந்த குழந்தையை பார்க்க அனுமதிக்க கோரி தந்தை செல்போன் டவரில் ஏறி பாசப் போராட்டம்…

விக்கிரவாண்டி – விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் பிறந்த குழந்தையை பார்க்க  அனுமதிக்க கோரி  தந்தை செல் போன் டவரில் ஏறி
பாசப்போராட்டம் நடத்தினார். போலீசார் பேச்சு வார்த்தை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா அற்பிசம் பாளையம் அருகே உள்ள முத்தியால் பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன்,35: கூலித் தொழிலாளி.இவரது மனைவி புனிதா, 31: பிரசவத்திற்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு குழந்தை நேற்று முன்தினம் பிறந்தது. நேற்று காலை 9 மணிக்கு மகப்பேறு மருத்துவ மனை வளாகத்திற்கு வந்த லட்சுமணன் , தனது குழந்தையை பார்க்க வேண்டும் என கூறி வார்டில் நுழைய முயன்றுள்ளார். அங்கு பணியிலிருந்த நர்ஸ்சுகள் மற்றும் செக்யூரிட்டிகள் இது பிரசவ வார்டு என்பதால் பெண்கள் மட்டுமே அனுமதிக்க முடியும். ஆண்களுக்கு அனுமதியில்லை என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், மருத்துவ மனை வளாகத்திலுள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். மருத்துவ மனைக்கு வந்திருந்த பொதுமக்கள் அவரை இறங்குமாறு பதற்றத்துடன் கூச்சலிட்டனர் .


தகவலறிந்த மருத்துவ மனையிலுள்ள புறக்காவல் நிலைய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிவேல் பேச்சு வார்த்தை நடத்தி அவரை கீழே இறக்கி பின்னர் அவரது மனைவி புனிதாவையும், குழந்தையையும் வெளியே அழைத்து வந்து அவரிடம் காண்பித்தனர். இச்சம்பவம் காரணமாக மருத்துவ மனை வளாகத்தல் காலை 9.30மணி முதல் 9.50 மணி வரை 20நிமிடம் பரபரப்புடன் காணப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »