குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார் விஜய் வசந்த் எம்பி மற்றும் ராஜேஷ் குமார் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி மோகனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் விஜயன். நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மஞ்சுளா கொல்லங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மீனாம்பிகா நட்டாலம் மேல்நிலைப்பள்ளி மதுரை சீனியர் கத்தோலிக்க ஒரு நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை புஷ்ப ஜெயந்தி. ஏழு தேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜ். செண்பகராமன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மலர்விழி. வடசேரி எஸ் எம் ஆர் வி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா. நாகர்கோவில் சிறுமலர் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ரத்தின லேக்ஸ். கீழ்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை செலின் மேரி. இமாகுலேட் அழகியமண்டபம் சிஎஸ்ஐ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சந்திரகாந்தம். ஆகியோருக்கு விருந்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

கல்விக்கு அரசு முக்கியத்துவம்

குமரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்றுள்ள ஆசிரியர்களை பாராட்டுகிறேன் நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பது கல்வி என்பதை நாம் மறக்க முடியாது இந்தியாவில் பல மாநிலங்கள் வளர்ச்சி பெற்று உள்ளது நமது மாநிலம் வளர்ச்சி பெற்றுள்ளது குஜராத் மாநிலம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.கேரள மாநிலம் சமூகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் தமிழகம் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முதுமை பெற்றுள்ளது.

இளைஞர்களுக்கு தனித்திறமை

தமிழக இளைஞர்களிடம் இல்லாத திறமைகள் இல்லை; அந்த நிலையை வெளியே கொண்டுவர வேண்டும் அதற்கு முக்கிய காரணம் கல்வி என்பதை நாம் மறந்துவிட முடியாது. கல்வி வளர நாம் வளர்ச்சி அடைகிறோம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏழை எளிய மாணவ-மாணவிகளிடம் புகலிடமாக இருக்கிறது. சாமானியர் வீட்டு குழந்தைகள் தங்களது இலக்கை அடைவதற்கு உதவுவது அரசு பள்ளிதான். தமிழக அரசை பொறுத்தமட்டிலும் ஆசிரியர்களுக்கு எப்பொழுதும் துணை நிற்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதியளித்துள்ளார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »