பொதுமக்கள் மத்தியில் திமுக அரசிற்கு அவதூறு ஏற்படுத்தும் பேரூராட்சி பெண் செயல் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை;

கன்னியாகுமரி – புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைப்பது தொடர்பாக ,பேரூராட்சி பெண் செயல் அலுவலர் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களிடம் பொய் பேசி அலைகளிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினார்.குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட இடையன்விளையில் தமிழக அரசு சார்பில் 1984ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர் .

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடப்படும் முகாம் ,காசநோய்க்கு மருந்து வழங்கும் முகாம் ,குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் என அவ்வப்போது இந்த கட்டிடம் செயல்பட்டு வந்தது. தற்போது இங்குள்ள கட்டிடம் முற்றிலும் பழுதடைந்து சுவர்களில் கீறல்கள் ஏற்பட்டு இடியும் ஆபத்தான, நிலையில் காணப்பட்டது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த கட்டிடம் நிரந்தரமாக மூடப்பட்டது .

பின்னர் அதே பகுதியில் உள்ள வேறொரு தனியார் வாடகை கட்டிடத்தில் இந்த அங்கன்வாடி மையம் தற்போது செயல்படுகிறது. அந்த புதிய கட்டிடம் தொலைவில் உள்ளதால் இங்குள்ள பெற்றோர்கள் குழந்தைகளை அங்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர் .

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் முகாம்கள் நடக்கும்போது அங்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் .இதனால் இந்த பழுதடைந்த கட்டிடத்தை மாற்றி புதிய அங்கன்வாடி மையத்தை கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசியல் பிரமுகர்களுக்கும் ,அரசு அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து புதிய அங்கன்வாடி மையம் அமைக்க மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரிடமிருந்து அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆவணம் ஒன்று அனுப்பப்பட்டது .

அதில் அகஸ்தீஸ்வரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பின்வரும் அங்கன்வாடி மையங்கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளதால் குழந்தைகள் நலன் கருதி பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை கட்டி தர ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்களில் ஒருசிலர் நாள்தோறும்  அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி அலுவலகம் சென்று புதிய கட்டிடம் தொடர்பான நடவடிக்கை குறித்து தகவல் பெற சென்றுள்ளனர்.

ஆனால் பொதுமக்களிடம் இதுவரை அந்த பேரூராட்சி பெண் செயல் அலுவலர் சரியான பதில் அளிக்கவில்லை. ஒரு சிலரிடம் புதிய கட்டிடம் தொடர்பாக இதுவரை எங்கள் அலுவலகத்திற்கு எந்த கடிதமும் வரவில்லை என பொய் பேசியுள்ளார்.அக்கடிதத்தை நான் இதுவரை என் கண்ணில் கூட பார்த்ததில்லை.நீங்கள் யூனியன் அலுவலகம் சென்று கேளுங்கள். சில சமயங்களில் பேரூராட்சியில் கிளார்க் இல்லை அதனால் தற்போது அதை பார்க்க முடியாது என அசால்ட்டாக கூறிவருகிறார். பேரூராட்சி செயல் அலுவலரின் இச்செயலால் பொது மக்கள் திமுக அரசை வறுத்தெடுப்பதுடன் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்தும் ,புதிய அங்கன்வாடி மையம் கட்டி தர வேண்டியும் போராட்டம் நடத்த போவதாக கூறிவருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »