வருஷநாடு ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

வருஷநாடு – உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எதிர்வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு விரத முறைகளை கடைபிடித்து சென்று வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக மாலை அணிந்து விரதம் இருந்த பெரும்பாலான பக்தர்கள் சபரிமலை செல்ல முடியவில்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஒரு சில பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தும் நெகட்டிவ் சான்று பெற்று நிலக்கல் சோதனைக்குப் பின் அனுப்பப்பட்டனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய கோவில்களில் விரதங்களை முடித்த பக்தர்களும் உண்டு. எனவே அந்த சிரமத்தை போக்க இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக 2 தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் கேரளாவிற்கு செல்ல அனுமதி அளித்துள்ளது. கேரள அரசு எனவே விரதம் மேற்கொள்ள இருக்கும் பக்தர்கள் காலதாமதமின்றி முதல் தவணை ஊசியைச் செலுத்திக் கொண்டால் இன்றைய நாளில் இருந்து இரண்டாவது தடுப்பூசி செலுத்த போதுமான கால அவகாசம் இருப்பதால் தவறாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாள் சுவாமி ஐயப்பனை தடையின்றி தரிசிக்க ஏதுவாக இருக்கும் ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி வருஷநாடு ஐயப்ப சேவா சங்கம் மணிமண்டபம் சார்பாக நிறுவனர் முருகன் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பாக முன்னெச்சரிக்கையாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இரண்டு தடுப்பு ஊசி செலுத்திய பக்தர்களுக்கு மட்டுமே மாலை அணிவிக்க வேண்டும் என அனைத்து குருசாமி மார்களும் கூறுகின்றனர். தடுப்பூசி செலுத்துவோம்! தொற்றிலிருந்து பாதுகாப்போம்! சபரிமலை ஐயப்பனை தரிசிப்போம்! ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »