கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயச்சந்திர பானுரெட்டி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள 100% சரிபார்ப்பு பணி( 25-08-2021) முதல் (10 -9 -2021) வரை நடைபெற்றது இதில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 9 வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரித்தும் பழுதடைந்த 16 வாக்குச்சாவடிகள் கட்டிடம் இடம் மாற்றம் செய்தும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1863 வாக்குச்சாவடிகள் உள்ளன. தற்போது கூடுதலாக 9 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது மேற்கண்ட வாக்குச்சாவடிகள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின் அரசியல் கட்சி பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் அல்லது சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகத்தில் ஒரு வார காலத்திற்குள் மனு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. சதீஷ் ,ஓசூர் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் செ.சதீஷ்குமார் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.