சிறைத் துறை அலுவலகம் முற்றுகை போராட்டம்.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க இந்திய தேசிய லீக் கட்சி சிறைத் துறை அலுவலகம் முற்றுகை போராட்டம்.  இஸ்லாமியஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் விடுதலையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக சிறைத்துறை தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் எழும்பூரில் மாநிலத் தலைவர் தடா அப்துல் ரஹீம் தலைமையில் இன்று 13.09.2021 நடைபெற்றது.
 ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நன்னடத்தை விதியை பின்பற்றி ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய  அரசாணை வெளியிடுகிறது.  தமிழக அரசின் அரசாணையை ஜாதி மத பேதமின்றி நிறைவேற்றுவதே திரைத் துறை அதிகாரிகளின் கடமை. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் மட்டும் விடுதலை செய்யாமல் பாரபட்சமாக நடந்துகொள்கின்றனர் . தமிழக அரசின் அரசாணையில்  முஸ்லிம் அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கூடாது என்று ஏதாவது சிறப்பு சட்ட வரைமுறை தமிழக அரசு அரசாணையில் வெளியிடப்பட்டதா ? இல்லையே..
பிறகு எதற்காக இப்படி ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள்  விடுதலையில் சிறைத்துறை அதிகாரிகள் பாராபட்சம் காட்டுகின்றார்கள்.அதேபோன்று ஆயுள் தண்டனை பெற்ற 6 , 7 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டால் வருடத்தில் 15 நாட்கள் பரோல் என்கிற விடுப்பு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 நாட்கள் பரோல் என்கிற விடுப்பு சிறை கண்காணிப்பாளரால்  வழி காவல்  இல்லாமல்  சிறை விதியைப் பின்பற்றி ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. முஸ்லீம் ஆயுள் தண்டனை கைதிகள் சுமார் இருபது ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகும். வழி காவல் இல்லாமல் பரோல் என்கிற விடுப்பு வழங்கப்படுவது இல்லை..
39 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் ராஜீவ் காந்தி வழக்கில் 7 பேர் விடுதலை விஷயத்தில் தமிழக அரசு ஆணையை ஜாதி மத பேதத்தோடு செயல்படும் துறையை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மதுரை ராஜா உசேன், மாநில பொருளாளர் முன்னான் செய்யது அலி மாநிலத் துணைத் தலைவர்கள் மல்லிப்பட்டினம் இம்ரான், யூனிஸ் கான், சுலைமான் சேட்  மாநில இளைஞரணி தலைவர் அல் ஆசிக்  மாநில தொண்டரணி தலைவர் அபுதாஹிர் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் அஜ்மல் கான் மாநில செயலாளர்கள் சாகிர் கான் கம்பம் சாதிக் மாநில தொண்டரணி ஆசிப், சென்னை மண்டலதலைவர் நூர் முகமது  மண்டல செயலாளர் காதர், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உமர், வட சென்னை மாவட்ட தலைவர் அப்துல் சமத் வடசென்னை மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் கிழக்கு மாவட்ட செயலாளர்  நெல்லை கலீல் தென்சென்னை மாவட்ட தலைவர் இலியாஸ் தென்சென்னை மாவட்ட செயலாளர் அல்தாப் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ரஹ்மதுல்லா திருவள்ளூர் மாவட்டம் பாஷா திருவள்ளூர் மாவட்டம் பாஷா திருவள்ளூர் மாவட்டம் காதர் பாஷா வேலூர் மாவட்ட தலைவர் சௌகத் அலி  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »