விழுப்புரம் – விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்கா தொரப்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட மேல்புதுப்பபட்டு பெரிய ஏரிகரையில் சேகரிப்பட்ட பனை விதைகளை நடும் பணி நடைபெற்றது. தமிழகத்தின் மரம் என சிறப்பு பெற்ற பனை மரத்திற்கும் தமிழர்களுக்கும் பண்டைய காலங்களிலிருந்தே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பனை மரத்தினை பாதுகாக்க தமிழக அரசு வேளான் சட்ட மசோதாவில் பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் ஆணை வேண்டும் எனவும் பனை தொழிலை ஊக்குவிக்கவும் பட்ஜெட்டில் 3 கோடி நிதி ஒதுக்கியதின் மூலம் பனை தொழிலை நம்பியுள்ள பல ஆயிரம் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு முக்கிய பயன் தருகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் பனை மரங்களை காக்கவும், புதிய பனை மரங்களை நடவும் ஆர்வம் காட்டி வரும் நிலையில்மேல்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் மேல்மலையனூர் வட்டாச்சியர் நெகரினசா தலைமையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பிலும், 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் பனை விதைகளை சேகரித்து அவற்றை நடும் பணியினை மேல்மலையனூர் கிராம அலுவலர் காளிதாஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டனர்.
இத்தகைய செயல்பாட்டினை பல்வேறு தரப்பினரும் பராட்டி வருகின்றனர்.