கடந்த 23.02.2023 இரவு சுமார் 11.30 மணியளவில், சென்னை, வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர் 6வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு ஓட்டல் வளாகத்தில், ஒருநபர் மது போதையில் தகராறு செய்வதாக கட்டுப்பாட்டறையில் கிடைத்த தகவலின் பேரில், J-7 வேளச்சேரி காவல் நிலைய தலைமைக் காவலர் சிவகுமார் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்ட நபரை விசாரணை செய்த போது, அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி, தலைமைக் காவலர் சிவகுமாரை தாக்கினார். உடனே, தலைமைக் காவலர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் ஒன்ற சேர்ந்து ரகளையில் ஈடுபட்ட நபரை காவல் வாகனத்தில் ஏற்றி, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
J-7 வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர், ராஜா, வ/30, த/பெ.சிவகுரு, SF-1 பிளாக், நெல்லை மேனர் அடுக்குமாடி குடியிருப்பு, ராம்நகர் விரிவு 2வது தெரு, வேளச்சேரி என்பதும், சம்பவத்தன்று இரவு ஓட்டலில் தகராறு செய்து விசாரணை செய்ய சென்ற தலைமைக் காவலரை தாக்கியும் ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இது குறித்து, J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, எதிரி ராஜாவை கைது செய்தனர். மேலும் விசாரணையில் எதிரி ராஜா, J-8 நீலாங்கரை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 1 கொலை வழக்கு உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி ராஜா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.