வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேல்டு விஷன் இந்தியா மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கடமலைக்குண்டு பகுதியில் உள்ள பாலூத்து ,தேவராஜ்நகர், நரியூத்து, கரட்டுப்பட்டி, மேலப்பட்டி, பள்ளி செல்லும் 216 ஏழை மாணவ மாணவிகளுக் பள்ளிப் பை பேக் வேல்டு விஷன் இந்தியா திட்ட மேலளர் ஜெஸ்சுரன் தங்கராஜ், பகுதி பொறுப்பாளர் யோவான் தலைமையில் கடமலை மேலப்பட்டி அங்கன்வாடி மையத்தில் வைத்து அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராணி, கிராம செவிலியர் முருகேஸ்வரி அங்கன்வாடி பணியாளர் ஜோபியா மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக பேக் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை அன்பரசன், ஜெகதீஸ், கோமதி, ஜெயப்பிரியா ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இலவசமாக வழங்கிய வேர்ல்டு விஷன் இந்திய நிறுவனத்திற்கு பயன் பெற்ற பள்ளி மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தன்னார்வலர்களும் இருபால் ஆசிரியப் பெருமக்களும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இவர்களின் இதுபோன்ற தொடர் உதவி கரங்களால் வறுமையில் உள்ள பல குடும்பங்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு கோழிகளை வழங்கியும், இலவச உணவு பொருட்களை வழங்கியும், பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத மாணாக்கர்களின் பயன் பயன்பாட்டிற்கு இவர்கள் செய்கின்ற இப்பணி மகத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.