வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் பாலூத்து ஊராட்சியில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக மயிலாடும்பாறை ஏடிபி இன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் உடல் எடை அதிகரிக்க தேவையான சத்தான பொருட்களை குழந்தைகளுக்கு வேர்ல்டு விஷன் இந்திய வழங்கி வந்தது. இன்று தலா ஒரு குழந்தைகளுக்கு ரூபாய் 2500 மதிப்பிலான பொருட்களை பத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இவ்விழாவில் திட்ட மேலாளர் ஜேசுவரன் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் யோவான் குழந்தைகளை நன்றாக வளர்ப்பது பற்றி எடுத்துரைத்தார். இதில் பாலுத்து ஊராட்சி எப் ஓ ஜெகதீஸ் வரவேற்புரையாற்றினார். அன்பரசன் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு இப்பகுதி மக்களுக்கு வழங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் வேர்ல்டு விஷன் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.