வேர்ல்டு விஷன் சார்பாக இலவச ஆடுகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கும் விழா ..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக மயிலாடும்பாறை ஏடிபி மூலமாக மந்திசுனை மூலக்கடை ஊராட்சிக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு 15 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு வெள்ளாடுகளை இலவசமாக வழங்கினர். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து ஊட்டச்சத்தான உணவு பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஜேசுவரன் தங்கராசு தலைமையில் பகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜி ஜான் டேனியல் முன்னிலையில் வழங்கப்பட்டது. உடன் ஜெயசீலன் திட்ட தயாரிப்பாளர் ராய் பகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர் வருகை தந்த அனைத்து பயனாளிகளுக்கும் எப் ஓ மாயவன் மாயகிருஷ்ணன் ஜெகதீஷ் ஆகியோர் நன்றிகளை தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »