சென்னை, மே 2022: வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (Veranda Learning Solutions Limited – “Veranda”), பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட (BSE: 543514, NSE: VERANDA) கல்வி தொழில்நுட்ப (EdTech) நிறுவனம் ஆகும். அது இன்று இந்தியாவில் பணியிட தகவல் தொழில்நுட்பத் திறன் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் விரிவான கற்றல் தளமான வெராண்டா அகாசியா (Veranda Acacia) – ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு தழுவிய நெட்வொர்க் மூலம், 25 இடங்களில் அதன் முதல் தொகுப்பு டெலிவரி மையங்களை அமைக்கிறது. முழு அடுக்கு வெப் டெவலப்மென்ட், கிளவுட் மற்றும் டெவொப்ஸ் (DevOps) மற்றும் டேட்டா சயின்ஸ் ஆகியவற்றுக்கான அகாசியா முதல் கட்ட திட்டங்கள், தொழில்துறையுடன் இணைந்து எஸ்எஸ்சி நாஸ்காம் (SSC NASSCOM) அமைப்பால் உருவாக்கப்பட்ட மற்றும் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறன் தரநிலைகளுடன் (Competency Standards) சீரமைக்கப்பட்டுள்ளன.
தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள் (IT-ITES) துறை, திறன்கள் கவுன்சில் நாஸ்காம் என்பது தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (National Skill Development Corporation – NSDC) மற்றும் இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் இந்திய அரசின் தொழில் முனைவோர் அமைச்சகம் (Entrepreneurship of the Government of India) ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப திறன்களுக்கான தேசிய தரநிலை அமைப்பாகும். 100% நடைமுறை சார்ந்த மற்றும் தொழில்துறை சார்ந்த பாடத்திட்டம், ஒரு ரெஜிமென்ட் கற்பித்தல் (Regimental Pedagogy) மற்றும் வலுவான வேலை வாய்ப்பு ஆதரவு மூலம் கற்பவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் விளைவு சார்ந்த அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டவை இந்தத் திட்டங்களாகும்.
அகாசியா திட்டங்கள் (வேலை தடங்கள்) தகவல் தொழில்நுட்ப தொழில்களில் திறமையான பணியாளர்களின் சமகால மற்றும் வளர்ந்து வரும் தேவைகளுக்கு முழுமையாக சீரமைக்கப்படுகின்றன. கூட்டு நிறுவனங்களுடனான வழக்கமான தொடர்புகளின் அடிப்படையில், அவர்களுக்கு வேலைக்குத் தயாராக இருக்கும் கல்லூரி பட்டதாரிகளை வழங்குவதாகும். இந்தத் தொழில் தடங்கள் பயிற்சி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு, அகாசியாவின் டெலிவரி பார்ட்னர் மையங்கள் மற்றும் நிறுவன வளாகங்களில் (Campuses) வழங்கப்படுகின்றன. முழு அடுக்கு வெப் டெவலப்மென்ட், கிளவுட் மற்றும் டெவொப்ஸ், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, மொபைல் ஆப் டெவலப்மென்ட் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் (Artificial Intelligence and Machine Learning) என முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் தலா மூன்று என மொத்தம் ஆறு வேலை தடங்கள் வழங்கப்படுகின்றன.
வெராண்டா அகாசியாவின் அறிமுகம் குறித்து பேசிய வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் சேர்மன் மற்றும் செயல் இயக்குநர் திரு. கல்பாத்தி எஸ். சுரேஷ் (Mr. Kalpathi S. Suresh, Chairman cum Executive Director), “எங்களின் அனைத்து திட்டங்களும் செயல்களால் இயக்கப்படுகின்றன மற்றும் வெராண்டா அகாசியா திட்டங்களுடன் தொழில்நுட்பத் துறையில் தற்போதைய திறமையான பணியாளர் இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளோம். வரவிருக்கும் 12 மாதங்களில் கற்றவர்களை தொழில்துறையில் விரைவாக ஒருங்கிணைக்க, உயர்தர, குறைவான கட்டணம் மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர் தலைமையிலான படிப்புகளை அடுக்கு (Tier) 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் வழங்க உள்ளோம். மாணவர்களுக்கு நிலையான தொழில்சார் தகுதியை வழங்குவதற்காக மக்கள், திட்டம் மற்றும் செயல்திறன் (People, Product and Performance) ஆகியவற்றில் முதலீடு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பல தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையை அடைவதில் அவர்களுக்கு உதவக்கூடிய திறமையான பணியாளர்களை அவர்களுக்கு வழங்க நாங்கள் அந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.” என்றார்.
அகாசியா நிறுவனத்தின் கேரியர் தடம் திட்டத்தில் சேரும் அனைத்துக் கற்பவர்களுக்கும் (Learners) வேலைவாய்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படவில்லை. கூடவே, தொழில்நுட்பம் அல்லாத நேர்காணல் தயாரிப்பு, மென்-திறன் பயிற்சி, தன் விவரக் குறிப்பு (Resume) மற்றும் போர்ட்ஃபோலியோ உருவாக்கம், மாதிரி நேர்காணல்கள் (Mock Interviews) ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து வகையான வேலை வாய்ப்பு தொடர்பான ஆதரவும் வழங்கப்படுகிறது. அனைத்து கற்பவர்களுக்கும் செயல்திறன் அளவுகோல்களை சந்திப்பார்கள். அவர்களுக்கு நேர்காணல் வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்படுகிறது. அதே வேளையில், வேலைக்கு ஆள்சேர்க்கும் நிறுவனங்கள் நேரடி வேலை வாய்ப்பு முனையத்தை அணுகுவார்கள். மேற்கூறிய படிப்புகளை வெற்றிகரமாக முடித்து, எஸ்எஸ்சி நாஸ்காம் (SSC NASSCOM) மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்ற பிறகு, கற்பவர்கள் இந்திய அரசின் (GoI) ஊக்கத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள்.
ஃப்யூச்சர்ஸ்கில்ஸ் பிரைம் (FutureSkills Prime) நிறுவனத்தின் மூலம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நாஸ்காம் அமைப்பானது டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் திறமையானவர்களை வழங்கல் மற்றும் தேவைக்கும் அளிப்புக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க எங்களுடன் இணைந்து செயல்படுகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளர்களின் தளத்தை உருவாக்கியுள்ளன.
வெராண்டா அகாசியா நிறுவனம் உருவானது குறித்து அதன் வணிகத் தலைவர் திரு. ஹிமான்ஷு தண்டோடியா (Veranda Acacia, Business Head – Mr. Himanshu Dandotiya) கீழ்க்கண்டவாறு கூறினார்.
“அகாசியா திட்டத்துடன், எடுரேகா (Edureka) எங்கள் கூட்டாளர்கள் மூலம் கல்வியை வழங்கும் கலப்பின முறையுடன் ஆஃப்லைன் (Offline) வணிகத்தில் இறங்குகிறது. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு லட்சக்கணக்கான வேலைக்குத் தயாராக உள்ள பட்டதாரிகள் தேவையாக உள்ளனர். ஆனால், மறுபுறம் நமது பட்டதாரிகளின் திறன் வேலை வாய்ப்பு தேவைக்கு ஏற்ப இல்லை. பல ஆண்டுகளாக பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிதாக ஆள்சேர்ப்பு செய்பவர்களுக்குப் பயிற்சி அளித்து, புதிய பட்டதாரிகளை வேலைக்குத் தயாராக்க இந்தத் திட்டத்தைத் துல்லியமாக வடிவமைத்துள்ளோம். எங்களின் முதல் தொகுப்பான 25 மையங்களின் விரைவான பதிவு ஊக்கமளிக்கிறது. ஏனெனில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.” என்றார்.
நெட்வொர்க் விரிவாக்கம் குறித்து பேசிய அகாசியாவின் தேசிய தலைவர் -விற்பனை மற்றும்செயல்பாட்டு திரு. மணீஷ் மாத்தூர் (Acacia’s National Head of Sales and Operations, Mr. Manish Mathur) பேசும் போது, “அகாசியாவில் உள்ள நாங்கள் இந்தியா முழுவதும் மற்றும் விரைவில் நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் ஓர் அதிநவீன கூட்டாளர் – நெட்வொர்க்கை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம். இது ஆர்வலர்கள் உயர்தர அங்கீகாரம் பெற்ற உள்ளடக்கத்துடன் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள உதவும். மேலும், நகரங்களை விட்டு இடம்பெயராமல் அவர்களின் வேலை வாய்ப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும். இது தேவை மற்றும் வழங்கல் இடைவெளியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் மற்றும் சமூக சமத்துவத்தை கொண்டு வரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.
“வெராண்டா அகாசியாவுடன் இணைந்து தொழில்சார்ந்த தகவல் தொழில்நுட்ப படிப்புகளை வேலைவாய்ப்புத் திறன்களுடன் வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் கற்பவர்கள் தொழில்நுட்பத் துறையில் நீண்ட கால வாழ்க்கையைப் பாதுகாக்க முடியும். அதேநேரத்தில், அதிக பலனளிக்கும் நீண்ட கால முதலீட்டு வாய்ப்பை எங்களுக்கு வழங்கி இருக்கிறது. வெராண்டா அகாசியாவின் முதல் கட்ட திட்டங்கள் எஸ்எஸ்சி நாஸ்காம் அமைப்பால் சான்றளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், திறமையான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை மற்றும் அளிப்பில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் ஒரு விளைவு சார்ந்த அணுகுமுறையின் அடிப்படையில் பாடத்திட்டம் உள்ளது என கற்பவர்களுக்கு உறுதியளிக்கப்படுகிறது.” என வி நெட் டெக்னாலஜிஸ் (டெலிவரி பார்ட்னர்) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் திருமதி.ஆர். விசாலாக்ஷி (Ms.R. Visalaakshi, Founder & Director, V NET Technologies) தெரிவித்தார்.
வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் குறித்து..
கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமத்தால் 2018-ல் நிறுவப்பட்ட, வெராண்டா லேர்னிங்க சொல்யூஷன்ஸ் நிறுவனம் பொதுவில் பட்டியலிடப்பட்ட கல்வி தொழில் நுட்ப நிறுவனமாகும். இது மாநில தேர்வாணைய தேர்வுகள், வங்கி, காப்பீடு, ரயில்வே, ஐஏஎஸ் மற்றும் சிஏ தொடர்பான தேர்வுகள் மட்டுமின்றி, திறன் மேம்பாட்டு திட்டங்கள் உள்பட இந்தியாவில் போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கான பயிற்சியை சமகால தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அளித்து வருகிறது. வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வலுவான வழிகாட்டிகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து ஒரு வலுவான கற்றல் இணையதளத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
வெராண்டா லேர்னிங் இணையதளமானது உயர்தர உள்ளடக்கத்தை வழங்குவதற்காக, தொழில்நுட்பம், செயல்முறைகள், வழிமுறைகள் ஆகியவற்றை கையாளுகிறது. மாணவர்கள் மீது சிறந்த தாக்கத்தை உருவாக்கவும், மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த பயனை அளிக்கவும் கவனம் செலுத்தி வருகிறது. மல்டி மாடல் டெலிவரி முறையை பயன்படுத்துவதுடன், மிகவும் கண்டிப்புடனும், ஒழுக்கமாகவும் கற்றுக் கொள்வற்கான கட்டமைப்பை கொண்டுள்ளது.
வெராண்டா ரேஸ், வெராண்டா சிஏ, வெராண்டா ஐஏஎஸ், எஜூரேகா [Veranda Race, Veranda CA, Veranda IAS, & Edureka] ஆகிய நான்கு துணை நிறுவனங்கள் மூலமாக, இந்நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது. Brain4ce Education Solutions என்பது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிராண்டாகும்.
எடுரேகா பற்றி (About Edureka)
கடந்த 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எடுரேகா, உழைக்கும் வல்லுநர்களுக்கான நேரடி ஆன்லைன் வகுப்புகள் அடிப்படையிலான திறன் மேம்பாடு (Upskilling) திட்டங்களுக்கு முன்னோடி நிறுவனமாக அறியப்படுகிறது. எடுரேகா, ஐஐடிகள், என்ஐடிகள் போன்ற முதன்மையான இந்திய நிறுவனங்களுடனும், பர்டூ (Purdue) போன்ற முக்கிய சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடனும், கிளவுட் கம்ப்யூட்டிங், டெவொப்ஸ், ஏஐ-எம்எல், டேட்டா சயின்ஸ், வெப் டெவலப்மென்ட், சைபர் செக்யூரிட்டி மற்றும் அதன் தனியுரிம பயிற்சி உள்ளடக்கத்துடன் கூடுதலாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கிறது.
எடுரேகாவின் பயிற்றுவிப்பாளர் தலைமையிலான நேரடி ஆன்லைன் வகுப்புகள் மாதிரியானது சிறந்த வகுப்பில் நிறைவு விகிதங்கள், கற்பவர் திருப்தி மற்றும் தொழில் மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எடுரேகாவின் பயிற்சி உள்ளடக்கம் ஆன்லைன் கற்பவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது மற்றும் அதன் வலைப்பதிவு (Blog), கேள்விபதில் சமூகம் மற்றும் யூடியூப் சேனல்களில் ஒவ்வொரு மாதமும் 1.1 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்படுகிறது. 1200–க்கும் மேற்பட்ட நிபுணத்துவம் கொண்ட பயிற்றுவிப்பாளர் குழுவைக் கொண்டிருப்பதால், இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான பணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு டிஜிட்டல் பொருளாதாரத்தில் (Digital Economy) உருமாறும் கற்றல் மற்றும் தொழில் வெற்றியை செயல்படுத்தும் பணியில் எடுரேகா ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் 2021 இல் கையகப்படுத்தப்பட்ட பிறகு, எடுரேகா இப்போது வெராண்டா லேர்னிங் சொலுஷன்ஸ் லிமிடெட் இன் முழு துணை நிறுவனமாக உள்ளது.
ஃப்யூச்சர்ஸ்கில்ஸ் பிரைம் பற்றி (About FutureSkills Prime)
ஃப்யூச்சர்ஸ்கில்ஸ் பிரைம் என்பது இந்தியக் குடிமக்களுக்கு டிஜிட்டல் திறன் சூழலை உருவாக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology – MeitY) மற்றும் நாஸ்காம் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான பொது-தனியார் கூட்டாண்மை (Public-Private Partnership) ஆகும். ஃபியூச்சர்ஸ்கில்ஸ் பிரைம் நிறுவனம், பல்வேறு துறைகள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் அல்லாதவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை மேம்படுத்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நாடு தழுவிய டிஜிட்டல் திறமைக் குழுவை உருவாக்கி வருகிறது. குறுகிய காலத்தில், ஃபியூச்சர்ஸ்கில்ஸ் பிரைம் இந்தியாவின் 8,00,000+ குடிமக்களை மேம்படுத்தியுள்ளது. அவர்களில் 89% இளைஞர்கள், இதன் மூலம், நாட்டை டிஜிட்டல் திறன் கொண்ட நாடாக மாற்றும் நோக்கத்துக்கு பங்களித்துள்ளது.