மதுரை –
மதுரை மாவட்டம் மேலூர் அருகே காயாம்பட்டி கிராமத்தில் வெம்கிட்டான்கண்மாயில் உள்ள புதர்மண்டிகிடக்கும் மடைகளை மறுசீரமைப்பு செய்து தரக்கூடிய விவசாயிகள் கோரிக்கை – மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொங்கம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது காயாம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் 76 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வெம்கிட்டான் கண்மாய். இக் கண்மாய் மூலம் கரையிபட்டி, இலுப்பபட்டி காயாம்பட்டி கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கிராம விவசாயிகள் பெரும்பாலும் இக்கண் மாயையை நம்பி வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
மேலும் இக்கண்மாயில் மொத்தம் மூன்று மடைகள் உள்ளன. கடந்த சில வருடங்களாக மூன்று மடைகளுமே மூடியநிலையில் தண்ணீர் செல்ல வழியின்றி பயன்படாத வகையில் உள்ளது. மடைகளை மீண்டும் சீரமைத்துத்தரக்கோரி விவசாயிகள் மேலூர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசு பதிவேட்டின்படி இக்கண்மாய்க்கு ஒரு மடை மட்டுமே உள்ளது என்றனர்.
இதற்கிடையே காயாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்ற விவசாயி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்கு நீதிமன்றம் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.
ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளோ இவ்விஷயம் சம்பந்தபட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் காரணமாக வேறு ஊர்க்கு சென்றுவிட்டனர் என்று கூறி விவசாயிகளை அலைகழித்து வருகின்றனர். இது குறித்து செந்தில் என்ற விவசாயி கூறுகையில், இக்கண்மாயில் மொத்தம் மூன்று மடைகள் இருந்தன. அதில் ஒரு மடை முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டது. மீதமுள்ள புதர்மண்டி கிடக்கும் மடைகளை சீரமைத்து கொடுத்தால்தான் தண்ணீர் செல்லமுடியும் விளைநிலங்கள் பாசன வசதி பெறும், ஏனென்றால் இக்கண்மாய் மூலம் 25000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் கண்மாய் ம் தூர்வாரபடாமல் சீமை கருவேலம் படர்ந்து காணப்படுகின்றன.
எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கண்மாயை தூர்வாரி மடைகளை புணரமைத்து விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.