விக்கிரவாண்டி –
விக்கிரவாண்டி ஒன்றியத்திலுள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
விக்கிரவாண்டி ஒன்றியம் வாக்கூர் கிராமத்தில் வட்டார வேளாண்மை ,உழவர் நலத்துறையின் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சிக்கு
மாவட்ட பயிற்சி நிலைய துணை இயக்குனர் ஆனந்தி தலைமை தாங்கி காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தார். திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் டாக்டர் நீலாவதி,வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் மாதவன் ஆகியோர் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி,அதிக மகசூல் ,பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ,இயற்கை முறை தொழில் நுட்பங்களை விளக்கினர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் கூறினார்.
உதவி வேளாண்மை அலுவலர் ராஜா,ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ்,முன்னோடி விவசாயி எத்திராஜ்மற்றும் வாக்கூர், வெட்டுகாடு, மூங்கில்பட்டு கிராம விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி அடுத்த வாக்கூரில் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ஆனந்தி,இயற்கை முறை காய்கறி செடிகளை விவசாயிகளுக்கு வழங்கினார். அருகில் உதவி இயக்குனர் மாதவன், உதவி பேராசிரியை நீலாவதி.