கன்னியாகுமரி – குமரி மாவட்டத்தின் விவசாயத்திற்காக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் ராஜேஷ்குமார் எம்எல்ஏ மனு கொடுத்தார்.
கோரிக்கை மனு
சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கில்லியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். நெய்யாறு இடதுகரை கால்வாய் தண்ணீர் மூலம் 1963 முதல் 2004 வரை குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தாலுகாக்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வந்தனர். 2004ஆம் ஆண்டு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்கும் விவசாயிகளை பாதுகாக்கவும் மீண்டும் நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
தண்ணீர் கொண்டுவருவதற்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.
தெங்கபட்டனம் இறைவன் துறை இணைக்கும் விதமாக தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். ரவி புதூர் சாலை சீரமைத்து கடல் தடுப்பு சுவருடன் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். தூத்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இறைவன் துறை மீனவ கிராமத்தை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். இதற்காக ஆறு தடுப்புகள் கொண்டு வரவேண்டும். பைங்குளம் தேங்காப்பட்டணம் போன்ற இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மீன்பிடித் துறைமுகம் மறுகட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. புதுக்கடை பரசேரி நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டு குடிநீர் திட்டத்தை காங்கிரட் குழாய்கள் மூலம் அமைத்து தர வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார் மனு கொடுத்துள்ளார்