செஞ்சி – விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி தொகுதியில் உள்ள ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்ற கழக வேட்பாளர்களுக்கு நேர்காணல் கூட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறை அமைச்சரும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான செஞ்சி கே .எஸ். மஸ்தான் தலைமை தாங்கி கழகத்தின் சார்பில் விருப்ப மனு அளித்த கழக நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினார். இதில் செஞ்சி மேல்மலையனூர் வல்லம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்தநிர்வாகிகள் பங்கேற்றனர்.
நேர்காணலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும் போட்டியிடக்கூடிய கழகத்தினருக்கு மக்களுடைய செல்வாக்கும் கழகத்தினரின் முழு ஆதரவு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் செஞ்சிமஸ்தான் தெரிவித்தார். நேர்காணல் நிகழ்ச்சி யில் ஒன்றிய செயலாளர்கள் செஞ்சி கிழக்கு விஜயகுமார் , மேல்மலையனூர் கிழக்கு நெடுஞ்செழியன் ,தலைமை தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்