விக்கிரவாண்டி – விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணி நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்திரவு படி விழுப்புரம் வட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ், கோட்ட பொறியாளர் சிவசேனா ஆகியோரது மேற்பார்வையில் உதவி கோட்ட பொறியாளர் தன்ராஜ் தலைமையில் உதவி பொறியாளர் அனிதா மற்றும் சாலை ஆய்வாளர்கள் ,சாலை பணியாளர்களை கொண்டு விக்கிரவாண்டியில் பழைய தேசிய நெடுஞ்சாலை, முண்டியம்பாக்கம் –பாண்டி ,வளவனுார் –பூவரசங்குப்பம், கடலுார் –பள்ளியநேலியனுார், மேல்பட்டாம்பாக்கம்–பஞ்சமாதேவி ஆகிய சாலைகளில் உள்ள பாலங்கள் மற்றும் சிறு பாலங்களில் உள்ள அடைப்புகள் மற்றும் மழைநீர் வரத்து வாய்க்கால்களை ஜே.சி.பி., உதவியுடன் சீரமைத்து துாய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர் . இப்பணி வரும் 25 ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி பழைய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பாலத்தில் அடைத்துக் கொண்டிருந்த செடிகள் மற்றும் மண்களைஜே.சி.பி., உதவியுடன் அகற்றி சீரமைக்கும் பணி நடந்தது. விக்கிரவாண்டி தாலுகா அற்பிசம்பாளையத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் பாலத்திலுள்ள மண் அடைப்புகளை ஜே.சி.பி., உதவியுடன் அகற்றி சீரமைக்கும் பணி நடந்தது.