சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவிட்டதின் பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாகV-1 வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் வில்லிவாக்கம், அகஸ்தீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு சிலர் பணம் வைத்து சீட்டுக்கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் பேரில் மேற்படி வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.கிறிஸ்டோபர், வ/36, த/பெ.சூசைராஜ், எண்.43, திருவேங்கடய்யா முதல்தெரு, வில்லிவாக்கம், சென்னை 2.சரவணன், வ/33, த/பெ.பானுபிரகாஷ், பெருமாள் கோயில் குளக்கரை தெரு, வில்லிவாக்கம், சென்னை 3.மணிகண்டன், வ/33, த/பெ.பழனிச்சாமி, அன்னை சத்யாநகர் முதல்தெரு, வில்லிவாக்கம், சென்னை 4.கங்காதரன், வ/47, த/பெ. புஷ்பராஜ், எண்.110, சிட்கோநகர், வில்லிவாக்கம், சென்னை, 5.திலீப்குமார், வ/30, த/பெ. கண்ணன், காமராஜர்நகர், வில்லிவாக்கம், சென்னை, 6.சந்தோஷ், வ/30, த/பெ.ஸ்டீபன், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை, 7.தசரதன், வ/27, த/பெ.ரூபலிங்கம், அண்ணாதெரு, வில்லிவாக்கம், சென்னைஆகிய7 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.1,500/- மற்றும் 1 சீட்டுகட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 7 நபர்கள் மீதும், உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.