சென்னை, வியாசர்பாடி, எஸ்.எம்.நகர், E-பிளாக், எண்.88 என்ற முகவரியில் வசித்து வரும் விக்ரம் சேகரன், வ/22, த/பெ. சேகரன் என்பவர் வியாசர்பாடி பி.கல்யாணபுரம் மெயின் ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். விக்ரம்சேகரன் தனது தாயுடன் அன்று இரவு மேற்படி துணிக்கடையிலிருந்த போது, அங்கு வந்த 3 நபர்கள் துணி எடுத்து விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். உடனே விக்ரமன் சேகர் அவர்களிடம் துணிக்குரிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார்,உடனே மேற்படி 3 நபர்களும், விக்ரம்சேகரன் மற்றும் அவரது தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவதூறாக பேசியுள்ளனர்.
மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்ரம்சேகரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த விக்ரமன் சேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இது குறித்து P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
P-3 வியாசர்பாடி காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.தினேஷ்வரன் (எ) தயாள்தினேஷ், வ/26, த/பெ.தணிகாசலம், எண்.219, பி.கல்யாணபுரம், 2வது தெரு, வியாசர்பாடி, சென்னை 2.அருண், வ/20, த/பெ. பிரகாஷ், எண்.240, 7வது பிளாக் 2வது தெரு, கொடுங்கையூர், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 17 வயது இளஞ்சிறார் ஒருவரும் பிடிப்பட்டார். அவர்களிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட தினேஷ்வரன் (எ) தயாள்தினேஷ் மீது ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இளஞ்சிறார் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.