விக்கிரவாண்டி தாலுகாவில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி தாலுகா பனையபுரத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:
 தமிழக அரசு பொதுமக்களை கொரோனா மூன்றாவது அலையிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்ள தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமினை நடத்தி வருகிறது. ஐந்து அறிவுள்ள ஜீவராசிகள் எல்லாம் முகக் கவசம் இன்றி சுவாசிக்கின்றன. ஆனால் ஆறவுள்ள நாம் அனைவரும் முகக்கவசம் அணிந்து சுவாசிக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம் . மாவட்டம் இன்னும் 9 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர்.அனைவரும் நோய் தொற்றிலிருந்தும், உயிர் பலியிலிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் . விக்கிரவாண்டி ஒன்றியத்தில் இன்று 89 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. அனைவரும் இன்று நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு கலெக்டர் மோகன் பேசினார்.
எம்.எல்.ஏ., புகழேந்தி தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்து பேசியதாவது : மிழக முதல்வர் ஸ்டாலின் , கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மெகா தடுப்பூசி முகாமினை இன்று நடத்த உத்திரவிட்டு , தாலுகா முழுவதும் முகாம்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அரசின் லட்சியமான 100 சதவிகித இலக்கை எட்டும் வகையில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டு பயனடைய வேண்டுகிறேன். இவ்வாறு எம்.எல்.ஏ., புகழேந்தி பேசினார். முகாமிற்கு  ஆர்.டி.ஓ., அரிதாஸ் முன்னிலை வகித்தார். தாசில்தார் தமிழ்செல்வி வரவேற்றார்.
சப்–கலெக்டர் கதிரேசன், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் பொற்கொடி,  பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் சாமுண்டீஸ்வரி, மேலாளர் பாலசுப்பிரமணியன், ஜே.ஆர்.சி., இணை கன்வீனர் தமிழழகன், தி.மு.க., மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன்,மாவட்ட துணை அமைப்பாளர்கள் முரளி,எத்திராசன், ஊராட்சி செயலாளர்கள்  புகழேந்தி, ஜெயபால், கணேசன், சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »