விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி பேரூராட்சி குளக்கரையில் குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் மற்றும் கிராம பொது மக்களால் புதியதாக ஆற்காட்டம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் கும்பாபிஷேகத்தை யொட்டி கடந்த 7 ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.நேற்று காலை 7.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து 7.57 மணிக்கு கடம்புறப்பாடாகி 8:07 மணிக்கு கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலையில் மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்று பூஜைகள் செய்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.
யாகசாலை பூஜைகளை விக்கிரவாண்டி ரவிச்சந்திர குருக்கள் தலைமையில் வேதாத்திரி சுவாமிகள் , சந்திரசேகர குருக்கள் ஆகியோர் செய்தனர் . சுவாமி சிலை பிரதிஷ்டை அபிேஷக ஆராதனைகளை ஸ்பதி சுப்ரமணி , பூசாரிகள் பலராமன், காசிலிங்கம் , முருகன்,வினோத் மற்றும் குழுவினர் செய்தனர் . விக்கிரவாண்டி மற்றும் குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா குமாரசாமி தலைமையில் கிராம முக்கியஸ்தர்கள் முன்னின்று செய்தனர். விக்கிரவாண்டி ஆற்காட்டம்மன் கோவிலில் வேதாத்திரி சுவாமிகள் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம்செய்தார். அருகில் தர்மகர்த்தா குமாரசாமி.