வாணியம்பாடி – வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்தவர், சமூகசேவகர், சமுதாய போராளி *வசிம் அக்ரம்* மாலை தொழுகைக்கு பின் படுகொலை… பதற்றத்தில் வாணியம்பாடி
6:45 க்கு மாலை நேர தொழுகை முடித்து வீட்டிற்கு செல்லும் வழியில்,விரோத கும்பல் செய்த படுகொலை, இரவு 7 மணிக்கு பதற்றம், 10 மணிக்கு காஞ்சிபுரம் பகுதியில் சிலர் கைது. நாம் விசாரித்ததில் கிடைத்தது. இரு குழுக்கள் எதிரும் புதிரும் உண்டு என்றும், கஞ்சா விற்பனையாளருக்கும், இவருக்கும் விரோதம் இருந்ததாக சொல்லப்படுகிறது, அவர்கள் கூலி படை மூலம் இந்த நிகழ்வு இருக்கலாம். மேலும் முஸ்லிம்களே இவருக்கு எதிர்பாளரும் உண்டு. நடப்பு கவுன்சிலர், CAA போராட்டம் மற்றும் சபையா கொலைக்கு நேற்று முன் தினம் கூட போராட்ட களத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. பல்வேறு பொது சேவையிலும் தொடர்புடையவர். இவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருப்பதாக சொல்லப்படுகிறது.10/09/2021 அன்று 10 மணிக்கு உடல் கொடுப்பதாக காவல் துறை சொன்னதாக கேள்வி (10-09-2021) அன்று விநாயகர் சதுர்த்தி அன்று மாலையே இந்த கொலை நடந்ததால் பல சந்தேகங்களை மக்கள் மத்தியில் உண்டு பண்ணுகிறது.சமூக பிரச்சனைகளை உருவாக்க யாரோ திட்டம் போட்டு இந்த கொலையை அரங்கேற்றம் செய்தார்களா என்ற சந்தேகமும் வலுக்கிறது.வாணியாம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் நேற்று மாற்றலாகி இன்று புது காவல் துணை கண்காணிப்பாளர் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மாறுதல் கூட கொலையாளிக்களுக்கு தெரிந்திருக்குமோ என்ற சந்தேகமும் உண்டு? இன்னும் சில நாட்களில் பல ரகசியம் வெளிப்படும், அல்லது மேலிட செல்வாக்கால் மூடி மறைக்கப்படலாம். நாளை வாணியம்பாடி பகுதியில் மேலும் பதற்றம் வரலாம். பாவம் அனாதையாக குழந்தை, மனைவி மட்டுமே.
அரசு அந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்குமா? இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் கொலை சம்பவம் முன் விரோத காரணமாக நடந்ததா கொலைக்கு பின்னனியில் யார் இருக்கின்றனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை நடந்த பகுதியில் பதற்றம் மற்றும் மக்கள் மத்தியில் பயத்தை அதிமாகவும் எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது’ குறிப்பிடத்தக்கது. தற்போதும் பதற்ற நிலை நீடித்து வருகிறது.