சென்னை, ஆழ்வார் திருநகர், சித்து விநாயகர் கோயில்,செயின்ட், வந்தேமாதரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆமெல்லா ஜோதினி கோபால் பிள்ளை, பெ/வ.58, க/பெ. கோபாலபிள்ளை என்பவர் கடந்த 17.11.2021 அன்று மேற்படி வீட்டை பூட்டிவிட்டு 20.11.2021 அன்று வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு, வீட்டில் வைத்திருந்த பணம் ரூ.4.5 கோடி மற்றும் 30 சவரன் தங்கநகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆமெல்லா ஜோதினி, R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-9 வளசரவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், தீவிர விசாரணை செய்தும், குற்றவாளிகள் பயன்படுத்திய காரின் பதிவெண் மற்றும் அடையாளங்களை கொண்டு, மேற்படி குற்றசம்பவத்தில் தொடர்புடைய 1.மணி, வ/31, த/பெ.சக்கரபாணி, 2.சதீஷ்குமார், வ/32, த/பெ. அன்பு 3.சுரேஷ், வ/32, த/பெ. கந்தராஜ் 4.ஆறுமுகம், வ/49, த/பெ.பாண்டியன், ஆகிய 4 நபர்களை ஏற்கனவே கடந்த 16.12.2021 கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.1.35 கோடி மற்றும் குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் காவல் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த சேகர், வ/57, த/பெ.ராகவன், எண்.42, ஶ்ரீகுமரன்நகர், கோவூர், சென்னை என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து ரூ.1 கோடியே 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.