கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டம் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியாளர் அரவிந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை . வேளாண்மை துறை. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வேளாண் பொறியியல் துறை பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய அரசின் இது வங்கியின் கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணி மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி மேல்சபை உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை
கூட்டத்தில் விஜயதரணி எம்எல்ஏ பேசுகையில் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் பசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அவர்களது கைவசமுள்ள நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் புதிதாக வறுமைக்கோடு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்றும் விளவங்கோடு சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் தெருவிளக்குகள் சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது
பிரின்ஸ் எம் எல் ஏ
திருவிதாங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் அவர்கள் பேசுகையில் தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் சமீப காலமாக வீட்டு மின் இணைப்புகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை மின்சாரம் துறை சார்ந்த அதிகாரிகள் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர்
ராஜேஷ்குமார் எம்எல்ஏ கூறுகையில் கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சில இடங்களில் உயர் மின்னழுத்தம் கம்பிகள் சற்று தாழ்வாக செல்கிறது அந்த மின் கம்பிகளை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வளாகத்தில் மீது முட்புதர்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. ஆங்காங்கு மனித கழிவுகள், கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன. எனவே அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் ஊரில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியாளர்
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பேசுகையில் அம்ருத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்கள் பொதுப்பணித்துறை மூலம் குளங்கள், ஆறுகள், கால்வாய்கள், அணைகள் ஆகியவற்றிலுள்ள மதகுகள் உள்ளிட்டவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். தற்போது வறுமை கோடு பட்டியலில் தங்களை இணைக்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வறுமைக்கோடு பட்டியல் ஆய்வு செய்யப்படும். அதுபோல் இப்பொழுது கொடுக்கப்பட்ட மனுக்களும் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் கூறினார்
அரசு அதிகாரிகள்
கூட்டத்தில் பேசுகையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லின் என்று தாஸ் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் துணை ஆட்சியாளர் சிவகுரு பிரபாகரன், திட்ட இயக்குனர் கணபதி, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, இயக்குனர் அந்தோணி பெர்னாண்டோ, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அகமது நசீர் ஆகியோர் கலந்து கொண்டு இதற்கான முயற்சிகளை எடுத்து அவருக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.