வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியை மையப்படுத்தி நான்கு ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளனர். இப்பகுதியில் மின்சாரம் பயன்படுத்தும் அனைவரும் மின் கட்டணம் செலுத்த 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள மயிலாடும்பாறை மின்சார அலுவலகத்தை நாடி வருகின்றனர். மின்சார வாரிய அலுவலகத்தில் மதியம் இரண்டு மணிக்குள் சென்றால் மட்டுமே மின் கட்டண தொகை கட்ட நேரிடுகிறது. தனியார் ஆன்லைன் மூலம் கட்டும்பொழுது கமிஷன் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலையில் உள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்ட தவறும் பட்சத்தில் மின்சார வாரியம் விதிக்கும் அபராத தொகையும் சேர்த்து கட்ட வேண்டும் என்ற சூழ்நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர். இதுபோன்ற அனைத்து சிரமங்களையும் போக்க மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்த இடம் ஒதுக்கீடு செய்தால் முன் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வருசநாடு ஊராட்சியில் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ள அரசு கட்டிடங்களை இது போன்ற மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். நிறைவேற்றி சாதனை படைக்குமா வருஷநாடு ஊராட்சி இதுபோன்ற சவால்கள் நிறைந்த போராட்டத்தில் தற்போது வருஷநாடு ஊராட்சி தத்தளித்து வருகின்றது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இடம் கொடுப்பீர் சாதனை செய்வீர் என்ற நம்பிக்கையில் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.