வருஷநாடு – தமிழக அரசு தமிழகம் முழுவதும் 2003 ஆம் ஆண்டு முதல் நடத்தும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 2021 வரை 10 ஆயிரத்துக்கு கீழ் ஊதியமும் மேற்பார்வையாளர்கள் 11 ஆயிரம் வரையும் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. சராசரியாக கணக்கிடும் போது ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் 330 ரூபாய்க்கு கீழே உள்ளது. இந்த வருமானத்தில் குடும்பம் நடத்துதல் குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, திருமணம் போன்ற இதர சுப நிகழ்ச்சிகளையும் செய்ய வேண்டிய நிலையும் இருக்கின்றது. மேலும் காவல்துறை முதல் கலால்துறை வரை அனைவருக்கும் நற்பெயர் எடுக்க வேண்டிய நிலையும், மின்சாரக்கட்டணம் ஒரு பகுதியும் மதுபானம் ஏற்றி இறக்கும் லோடு தொழிலாளர்களுக்கு சம்பளமும் டேமேஜ் பாட்டில்களுக்கு பொறுப்புகளையும் அவர்களை ஏற்கின்ற சூழ்நிலை இருப்பதாலும் 8 மணி நேரத்திற்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 50 க்கும் கீழ் குறைவான சம்பளத்தில் பணியாற்றி வெளியூரிலிருந்து வரும் ஊழியர்கள் எரிபொருள் மற்றும் மதிய உணவு போன்றவற்றை செலவு நீக்கு செய்து பார்த்தால் நூறு ரூபாய் சம்பளம் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே தமிழக அரசு டாஸ்மாக் ஊழியரின் நிலையினைக் கருத்திற்கொண்டு பணி நிரந்தரம் செய்துகொடுக்க வேண்டும் எனவும் மாத ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றனர்.
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பணியாற்ற தயாராக உள்ளதாகவும் அரசு விடுமுறை தவிர்த்து மற்ற இதர நாட்களில் ஞாயிற்றுக்கிழமை உட்பட பணியாற்றி வரும் எங்களின் மன நிலையை கருத்தில் கொண்டு தொழிலாளர் நலச் சட்டங்களை மதித்து டாஸ்மாக் ஊழியர்களின் மன மற்றும் குடும்ப நிலையை புரிந்து ஊதிய உயர்வு மற்றும் நிரந்தர பணி ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்களின் மன குமுறல்கள் ஆக உள்ளது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதை கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு அரசின் உத்தரவை மதித்து அரசு விதிக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நேரத்தில் பணியாற்றிவரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றனர். பணி நேரத்திற்கு முன்பு வரவேண்டும் பணி முடிந்தும் ஸ்டாக் மற்றும் வரவு செலவுகளை பார்ப்பதற்கு அதிகப்படியாக ஒருமணிநேரம் சேர்த்து 10 மணி நேரம் வரை பணியாற்றி வரும் எங்களின் குடும்ப வாழ்வாதாரத்தை மனதிற்கொண்டு தமிழக அரசு முன் வர வேண்டும் என தமிழ்நாடு வாணிப கழக டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர் சார்பாக பணிந்து கேட்டுக்கொண்டு இந்த மனக் குமுறல்களை வெளியிட்டுள்ளனர்.