வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள வருஷநாடு ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பல லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பணித்தள பொறுப்பாளர்கள் துணையுடன் பல லட்ச கணக்கில் மோசடி செய்தது ஊராட்சி செயலர் எனவும் அதை கண்டுபிடித்து ஆதாரத்தோடு கொடுக்க வார்டு உறுப்பினர் தயாராக இருப்பதாகவும் இந்த தவறை ஒத்துக் கொண்ட ஊராட்சி செயலாளர் எனவும் அவற்றை தெரிந்தும் தெரியாதது போல் மூடிமறைக்கும் ஊராட்சி மன்ற தலைவர் என அடுக்கடுக்காக பட்டியலிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகார் வழங்கியுள்ளார் வார்டு உறுப்பினர் கனிமொழி வெளியூரில் இருப்பவர்கள் இங்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவதாக கணக்கு காட்டி பணம் எடுப்பதாகவும் இன்னும் பல காரணங்களை ஆதாரத்துடன் விரைவில் திட்ட அலுவலர் மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலகம் முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோரிடம் புகார் மனுவாக கொடுக்க இருப்பதாக சமூக ஆர்வலரும் வருஷநாடு ஊராட்சி மன்ற உறுப்பினருமான கனிமொழி கூறியுள்ளார் அதிவிரைவில் அம்பலம் வெளிப்படும் மோசடி செய்தவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என கூறி வருகின்றார் முழு ஆதாரங்களை திரட்டி முழு செய்தியாக வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.