வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை பலதரப்பட்ட போராட்டங்களுக்கு பின்பு தனி நபரிடம் ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாய் மீட்க இப்பகுதி விவசாயிகள் கண்மாய் மீட்புக்குழுவினர் சேர்ந்து நீதிமன்றத்தை நாடி பல வருடங்களுக்குப் பின்பு தற்போது இப்பகுதி விவசாயிகளின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், விவசாயிகள் பயன்பாட்டிற்கும் கண்மாய் மீட்கப்பட்டது தற்போது வருஷநாடு ஊராட்சிகள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை கண்மாயில் கொட்டி சுகாதார கேடை ஏற்படுத்தி கொட்டும் குப்பையில் நெருப்பு வைத்து அப்பு கையினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பலமுறை செய்தியிலும் ஊராட்சி நிர்வாகத்திடம் நேரிடையாகவும் புகார் அளிக்கப்பட்டது. பவள நகர் சாலையில் வடக்குப்புறம் கண்மாயில் குப்பைகளை போட்டு வந்தனர். தற்போது தென் பகுதியில் கொட்டி வருகின்றனர். இது ஊராட்சி நிர்வாகத்திற்கு அழகல்ல எனவும் குப்பை கொட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக்கூறி குப்பைகளை போட மாற்று இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் வருஷநாடு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மயிலாடும்பாறை யூனியன் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இப்பகுதி விவசாயிகள் தன்னார்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்