விக்கிரவாண்டி விக்கிரவாண்டி கடைவீதியில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வண்ண மயமான அலங்கார குடைகள் விறுவிறு விற்பனையாகின. தமிழக அரசு வினாயகர் சதுர்த்தியை சிறு சிறு கோவில்களை தவிர பொது இடங்களில் வினாயகர் சிலை வைத்து வழிபட தடை விதித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வினாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
நேற்று விக்ரவாண்டி கடைவீதியில் வினாயகர் சிலைக்கு வைக்கக்கூடிய குடைகள் தங்க நிறத்திலும், வண்ணமயமான சுங்குகள் டைட்டா அலங்கார குடைகளை திண்டிவனத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர் சக்திவேலு,19 என்பவர் தனது மொபட்டில் வைத்து வீதிவீதியாக சென்று சிறிய குடைகளை ரூபாய் 50க்கும் பெரிய குடைகளை ரூபாய் 70 வரைக்கும் விற்பனை செய்தார். சிறியவர்கள் விருப்பத்தின் பேரில் குடும்பத்தினர் குடைகளை சந்தோஷத்துடன் வாங்கி சென்றனர். விக்கிரவாண்டி கடைவீதியில் தங்கமயமான அலங்கார விநாயகர் குடைகள் விறு விறு வெனவிற்பனை ஆகியது.