சென்னை, பிராட்வே, மூக்கர் நல்லமுத்து தெரு, எண்.29 என்ற முகவரியில் திருநங்கை தீபா (எ) அருணாச்சலம், வ/27, த/பெ.இராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். தீபா (எ) அருணாச்சலம் காலை 9.00 மணியளவில் பிராட்வே, சுங்கர் இல்லம், ஜாபர்சாரங்கன் சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி வையாபுரி (எ) கிருஷ்ணன் எங்கள் ஏரியாவுக்குள் எப்படி வரலாம் என கேட்டு அவதூறாக பேசி தகராறு செய்து போது. இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த வையாபுரி (எ) கிருஷ்ணன் மேற்படி திருநங்கை தீபா (எ) அருணாச்சலத்தை மரக்கட்டையால் தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த தீபா (எ) அருணாச்சலம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இது குறித்து B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட வையாபுரி (எ) கிருஷ்ணன், வ/37, த/பெ.எட்டியப்பன், எண்.7, கோபால்செட்டிதெரு, சென்னை என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட வையாபுரி (எ) கிருஷ்ணன் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10 வழக்குகள் உள்ளதும், இவர் B-1 வடக்கு கடற்கரை காவல்நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட வையாபுரி (எ) கிருஷ்ணன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.