வருஷநாடு ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமம் மற்றும் மலை கிராமம் உள்ளது. இதில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலையை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் தமிழக அரசு வழங்கும் ரேஷன் பொருட்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு என்கின்ற ரேஷன் கார்டில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு தரத்திற்கு ஏற்றார்போல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களுக்கு 35 கிலோ அரிசி வீதமும் அதற்குரிய இலவச பொருட்களும் வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் 12 கிலோ அரிசி மட்டும் பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. எனவே கூலி வேலை செய்து ரேஷனில் வழங்கப்படும் பொருட்களை நம்பி தனது குடும்பத்தை நடத்தி வரும் பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் ஸ்மார்ட் கார்டு என்ற ரேஷன் கார்டு மறு ஆய்வுக்கு உட்படுத்தி அனைத்து பகுதிகளில் முகாம் அமைத்து உரிய பயனாளிகளுக்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் சலுகையின் அடிப்படையில் பொருட்கள் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கின்றனர். இதனால் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாக்குவாதம் ஏற்படுகின்ற நிலையும் உள்ளது. எனவே அனைத்து ஸ்மார்ட் கார்டுகளையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி இப்பகுதியில் சிறப்பு முகாம் வேண்டும் என கேட்டுக் கொள்கின்றனர்.