- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமானது, சென்னை கிழக்கு பிரிவு DCP சமய்சிங் மீனா IPS,தலைமையில் நடைபெற்றது.
- இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 25 ராபிடோ ஆட்டோ கேப்டன்கள் கார்டியோ நுரையீரல் மறுஇயக்கம் (CPR) மற்றும் அடிப்படை உயிர் ஆதரவு (முதல்உதவி) ஆகியவற்றில் பயிற்சி பெற்றனர், மேலும் இந்த பயிற்சியானது சாலையில் விபத்துக்கள் அல்லது மருத்துவ அவசர நிலைகளின் போது சரியான நேரத்தில் உதவி வழங்க ராபிடோ ஆட்டோ கேப்டன்களுக்கு உதவும்.
- விபத்து இல்லாத சென்னையை உருவாக்க உதவும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையுடன் கூட்டு சேர நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
சென்னை, பிப்ரவரி 2023 – இந்தியாவில் ஆட்டோ, டாக்ஸி சேவை வழங்கும் துறையில் முன்னணி நிறுவனமான ராபிடோ ஆட்டோ, சென்னை பெருநகர காவல்துறை (GCCP) உடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தது. இந்த பிரச்சாரமானது சென்னையில் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சாலை சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் நகரின் இரண்டு முக்கிய போக்குவரத்து சிக்னல்களான மயிலாப்பூர் லஸ் கார்னர் சிக்னல் மற்றும் சாந்தோம் ஹைரோட்டில் உள்ள லைட்ஹவுஸ் சிக்னல் ஆகியவற்றில் நடைபெற்றது.
இந்த பிரச்சாரமானது, பயிற்சித் திட்டம் மட்டுமின்றி, பொது மக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த செய்திகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்திலும் ஈடுபட்டது. ஹெல்மெட்கள் அணிவதன் முக்கியத்துவம், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல், வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த செய்திகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த செய்திகள் ஒலிபெருக்கி மூலம் ஒளி பரப்பப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிகழ்வுகள் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ கேப்டன்களிடமிருந்து உற்சாகமான பங்களிப்பை பெற்றன மற்றும் போக்குவரத்து இயக்கத்தை கருத்தில் கொண்டு முறையே சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கியத்துவம் குறித்து ராபிடோ ஆட்டோ ஊழியர்கள் நடத்திய மைம் (விகட) நிகழ்ச்சி இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும். இந்த நிகழ்ச்சியானது, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிறுவனம் மேற்கொண்ட முயற்சிக்கு பாராட்டப்பட்டு,பொது மக்களிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த ராபிடோ ஆட்டோ -வின் இணை நிறுவனர் பவன் குண்டுபள்ளி, “ஒருபொறுப்பான பயண -சேவை தளமாக, விபத்து இல்லாத இந்தியாவை உருவாக்க நாங்கள் எங்கள் பங்களிப்பை வழங்குவோம் என்று நம்புகிறோம். இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் சாலை பாதுகாபு விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் இந்த இலக்கை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்த முன் முயற்சிக்காக சென்னை பெருநகர காவல் துறையுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இது சென்னையில் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சாலை சூழலை உருவாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். சென்னையில் ராபிடோ ஆட்டோவின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவிய ஒரு வெற்றிகரமான நிகழ்வாகும். இந்தியாவில் பாதுகாப்பான மற்றும் அதிகப் பொறுப்பான சாலைச் சூழலை உருவாக்குவதற்குப் பங்களிக்க அதிகமான கார்ப்பரேட் நிறுவனங்கள் முன் வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ராபிடோ ஆட்டோ தீவிர பங்கு வகிக்கிறது. போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் வாகனம் ஓட்டும் போது பொறுப்புடன் நடந்து கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்குக் கற்பிப்பதில் இந்த நிறுவனத்தின் முயற்சிகள் கவனம் செலுத்துகின்றன. இந்த நிறுவனம் ஏற்கனவே பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் பல வெற்றிகரமான பிரச்சாரங்களை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தனது முயற்சிகளை இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த உறுதி பூண்டுள்ளது.
விபத்து இல்லாத சென்னையை உருவாக்க உதவும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையுடன் கூட்டு சேர இந்த நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. சென்னையின் சாலை பாதுகாப்பு சூழ்நிலையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் விரிவான சாலை பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க காவல்துறை மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பது, இந்த நிறுவனத்தின் நோக்கமாக இருக்கிறது.
இதுஎவ்வாறுசேவைசெய்கிறது?
iOS / அண்ட்ராய்டு இல் இந்த பயன்பாட்டைப் பதிவிறக்கி, உங்கள் கணக்கிலிருந்து உள்நுழைந்து, முன்பதிவு செய்யத் தொடங்குங்கள். முன்பதிவு செய்தவுடன், தொகை மற்றும் கேப்டன் விவரங்கள் முகப்புப் பக்கத்தில் தோன்றும், மற்றும் எங்கள் கேப்டன்கள் விரைவாக பிக்-அப் இடத்திற்கு வந்து விடுவார்கள். உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எங்கள் கேப்டன்கள் கூடுதல் ஹெல்மெட்டை எடுத்துச் செல்கிறார்கள், இது கேப்டன் வந்தவுடன் கொடுக்கப்படும் மற்றும் கூடுதல் கட்டணம் ஏதுமில்லை. உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானதாயிருக்கிறது. ராபிடோ வந்துள்ளதால், போக்குவரத்தை சாக்காகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நமது நகரங்களை அணுபவிப்போம்.