சென்னை, டிசம்பர் 2021 :சென்னையில் நடைபெற்ற ராஜஸ்தான் அரசின் முதலீட்டாளர் இணைப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை முடிவடைந்தது. இதில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பு உணர்த்தும் கடிதங்கள் (Lols) கையெழுத்தாகியுள்ளன. சூரிய ஒளி மின்சார உற்பத்தி, ஜவுளிப் பூங்கா, மருந்து துறை, உருக்கு, மின்சார வாகனங்கள், சுற்றுலா, எரிவாயு உள்ளிட்ட துறைகள் முதலீட்டுகளைப் பெற்றுள்ளன. ராஜஸ்தான் அரசு நடத்திய நிகழ்ச்சியில் அதிக அளவிலான முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு, மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதனால் ராஜஸ்தான் மாநிலம் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் எனத் தெரிகிறது
ராஜஸ்தான் அரசு, இந்திய தொழில் கூட்டமைப்பு உதவியுடன் தேசிய அளவிலான முதலீட்டாளர்கள் ஈர்ப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் கண்காட்சியை நடத்தியது. வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி 24-25-ம் தேதிகளில் ஜெய்பூரில் நடக்க உள்ள ராஜஸ்தான் அரசின் மெகா முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தீவிரமான முதலீட்டாளர்கள் இணைப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
‘இன்வெஸ்ட் ராஜஸ்தான்’ [“Invest Rajasthan] என்ற இந்த முன்மாதிரி நிகழ்வுகள், மாநிலத்தின் அதிகரித்து வரும் முதலீட்டுக்கான சாத்தியங்கள் மீது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு துறைகளில் முதலீடுகளை தூண்டுவதன் மூலமாக, இந்தியாவின் தொழில்துறை மையமாக ராஜஸ்தான் மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற மாண்புமிகு முதல்வர் அசோக் கெலாட்டின் லட்சியத்தை அடைவதற்கான முக்கியமான மைல் கல்லாக இந்த நிகழ்ச்சி அமையும்.’ என்று ராஜஸ்தானின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திருமதி. சகுந்தலா ராவத் (Smt Shakuntala Rawat, Industry and Commerce Minister of Rajasthan) தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திருமதி. சகுந்தலா ராவத் தலைமையில், உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் திரு. பிரதாப் சிங் கசரியவாஸ் ஆகியோர் கொண்ட மாநில அரசின் பிரதிநிதிகள் குழு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியது. அப்போது, ராஜஸ்தானில் கொட்டிக் கிடக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து உறுதி அளித்தனர்.
‘தொழில்துறை வளர்ச்சியில் புதிய யுகத்துக்குள் ராஜஸ்தான் அடியெடுத்து வைக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் தொழில் செய்வதற்கு ஏதுவான கொள்கை திட்டங்களையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மாநில அரசு உருவாக்கி உள்ளதால் தொழில் செய்வது மேலும் எளிதாகி உள்ளது. இந்த கண்காட்சியில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம், முதல்வர் திரு. அசோக் கெலாட்டின் முதலீட்டாளர் கொள்கையின் மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைக் காட்டுகிறது.’, என்று திரு. பிரதாப் சிங் கசரியவாஸ் தெரிவித்தார்.
ராஜஸ்தான் அரசாங்கம் இதற்கு முன்பு டெல்லி, அகமதாபாத், மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் நகரங்களில் இது போன்ற முதலீட்டாளர் ஈர்ப்பு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி, தமிழ் நாட்டில் உள்ள ராஜஸ்தான் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு முந்தைய நாளில், ராஜஸ்தான் மாநில அரசு பிரதிநிதிகளுக்கு தமிழ்நாடு வாழ் ராஜஸ்தானியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திரு. சுஷாந் பந்த், கூடுதல் தலைமை செயலாளர், பி.எச்.இ.டீ, ராஜஸ்தான் அரசு, திரு. திரஜ் ஸ்ரீவத்சவா, ராஜஸ்தான் பவுண்டேசன் கமிஷனர், ராஜஸ்தான் அரசு, டாக்டர் அருண் கார்க், கூடுதல் கமிஷனர் டீ.எம்.ஐ.சி., ராஜஸ்தான் அரசு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் முதலீட்டாளர்கள்-ராஜஸ்தான் அரசு சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். யந்திராளி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு. அபினவ் பந்தியா, ராஜஸ்தானில் முதலீடு செய்ததால் ஏற்பட்ட இன்பமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின் வரவேற்புரை மற்றும் நன்றியுரையை திரு. ஐசேஹோவர் சுவாமிநாதன் (Shri. Eisenhower Swaminathan) நிகழ்த்தினார்.
’இன்வெஸ்ட் ராஜஸ்தான்’ நிகழ்ச்சி வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-25 தேதிகளில் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது, இதனால் ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பு உணர்த்து கடிதங்களை பெற்றுள்ளது. புதிய வளர்ந்து வரும் பெட்ரோகெமிக்கல் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு பகுதி, இ.வி.மண்டலங்கள், பென்டெக் பார்க் உள்ளிட்டவற்றுடன், பாரம்பரியமான தாது வளங்கள், கொட்டிக் கிடக்கும் நில வளங்கள் மற்றும் திறன் மிகு மனித ஆற்றலுடன் முதலீட்டுக்கான சிறந்த இடமாக தனது புதிய முகத்தை ராஜஸ்தான காட்டுகிறது. ராஜஸ்தான் முதலீட்டு மேம்பாட்டு திட்டம் 2019-ஆனது, புதிய முதலீடுகளுக்கு மிகவும் லாபகரமான சலுகைகள் மற்றும் தளர்வுகளை வழங்குகிறது. மேலும், கூடுதல் பலன்களுக்கான புதிய பகுதிகளையும் கண்டறிந்துள்ளது. முதலீட்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்பான தனித்துவமாக வடிவமைக்கப்படும் சலுகைகள் பெரும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாக உள்ளது.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அனுப்பி உள்ள செய்தியில், ‘இன்வெஸ்ட் ராஜஸ்தான் 2022’ நிகழ்வு, மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் தனியார் துறை நிறுவனங்களுடன் நீண்டகால கூட்டை கட்டமைக்க வேண்டும் என்ற எங்கள் உறுதிபாட்டின் வெளிப்பாடாகும். இது, முதலீட்டாளர்களுக்கு நாங்கள் அளித்த உறுதிமொழியை செயல்படுத்துவதற்கான முக்கிய நிகழ்வாகும். ராஜஸ்தான் அளிக்கும் அற்புதமான வாய்ப்புகளின் தொகுப்புகளின் பலன்களை பெறவும், அனுபவிக்கவும் உங்களை வரவேற்கிறேன். நாம் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க எங்களுடன் இணையுங்கள்.’, என்று கூறியுள்ளார்.
மேலும் தகவல்களுக்கு https://invest.rajasthan.gov.in/ என்ற இணைய தளத்தில் லாக் இன் செய்யவும்.