செஞ்சி – விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருத்தலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க மேல்மலையனூர் வருவது வழக்கம். தமிழக அரசு கொரோனா நோய்கள் பரவல் காரணமாக சாமி தரிசனத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என நான்கு நாட்கள் இவ்வாரம் சாமி தரிசனத்திற்கு தடை விதித்திருந்த நிலையில் .திங்கள் முதல் வியாழன் வரை சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆவணி மாத அமாவாசை என்பதால் அதிகாலையில் மூலவர் அம்மனுக்கு பால்,பண்ணீர், தயீர், இளநீர்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்பு மாலையில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக தாய் மூகாம்பிகை அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து அம்மன் சிறப்பு காட்சியளித்தார்.
திருகோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் யாரும் இன்றி எளிய முறையில் கோயில் பூசாரிகள் அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி வழிபட்டனர். ஊஞ்சல் உற்சவத்தில் திருக்கோயில் உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழுத்தலைவர் வடிவேலு பூசாரி, அறங்காவலர்கள் செந்தில் பூசாரி,தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி,செல்வம் பூசாரி,சரவணன் பூசாரி மற்றும் சந்தானம் பூசாரி, திருக்கோயில் பணியாளர்கள் மணி சதீஷ் மற்றும் ஆறாம் முறை பூசாரிகள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டனர்