மேலூர் – திருப்புத்தூர் வரை நடைபெறும் சாலைப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை – கன்னியாகுமரி வரையிலான தொழிற்தடத் திட்ட அலகின் மூலம் நடைபெற்று வரும் மேலூர் – திருப்புத்தூர் சாலைப் பணியை நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் எம்.கே.செல்வன் நேற்று ஆய்வு செய்தார். மேலூர் – திருப்புத்தூர் வரையிலான 30 கி.மீ தூரம், கடந்த மார்ச் 2021ல் ரூ. 110 கோடி திட்ட மதிப்பில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தலைமை பொறியாளர் செல்வன் ஆய்வு செய்து, நடைபெற்று முடிந்த சிறுபாலங்கள், சாலை பாதுகாப்பு, தரம், அகற்றப்படும் மரங்களின் எண்ணிக்கைக்கு 10 மடங்கு மரக்கன்றுகளை நடும் பணி மற்றும் மரங்களை மறுநடவு செய்யும் பணிகள் ஆகியவற்றை துரிதப்படுத்தி உத்தரவிட்டார். சாலைப்பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்தகாரருக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கீதா, உதவி கோட்ட பொறியாளர் சித்ரா, உதவி பொறியாளர் கிஷோர் குமார் உட்பட அதிகாரிகள் இருந்தனர்.