முத்தியால்பேட்டை ஊராட்சி காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்

காஞ்சீபுரம் – முத்தியால்பேட்டை ஊராட்சி காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என முத்தியால்பேட்டை ஆர்.வி ரஞ்சித்குமார் தலைமையில் கிராம பொதுமக்கள்  கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
காஞ்சீபுரம் அருகே  முத்தியால்பேட்டை ஊராட்சியை, காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைக்காமல்,கிராம ஊராட்சியாக செயல்பட வேண்டும் என, கிராம மக்கள் ஏராளமான பெண்கள் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் முத்தியால்பேட்டை ஆர்.வி ரஞ்சித்குமார் தலைமையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் முத்தியால்பேட்டை ஆர்.வி ரஞ்சித்குமார் தலைமையில் 5 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது முத்தியால்பேட்டை ஆர்.வி ரஞ்சித்குமார்,  மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கி பரீசிலனை செய்யுங்கள் என்று வேண்டி கொண்டார்.
அம்மனுவில் அவர்கள் கூறியதாவது:காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களையும் புதியதாக உருவாக்கப்படும் காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைய இருப்பதாக அறிந்தோம். முத்தியால்பேட்டை ஊராட்சியில் மொத்த குடும்பங்கள் 1464 இதில் 1040 குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் இக்குடும்பத்தில் 2200 நபர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்து வருகின்றனர்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் வருமானத்தால் குடும்பம் நடத்திதற்போது முத்தியால்பேட்டைஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் அனைத்து குடும்பங்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மீண்டும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள். மக்கள் நலன் கருதி முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைக்காமல் தற்போது உள்ள கிராம ஊராட்சியாக செயல்படுத்தி தருமாறு அம்மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில், கௌரிஅன்பழகன், அஞ்சலாட்சி, குன்னிம்மா, உமா, மல்லிகா, எல்லம்மா,திலகம் உள்பட  200க்கும் மேற்பட்ட கிராமத்து பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »