மீண்டும் கொரானா – மக்களுக்கு எச்சரிக்கை..

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து  பகுதிகளிலும் நியாயவிலை கடைகளில் கூட்டம் அதிகமாக வருகிறார்கள் .நியாயவிலை கடையில் பணிபுரியும் பணியாளர்கள் கை ரேகை வைத்தால் தான்  பொருள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். வயதான முதியோர்கள் வெளீயே  வரமுடியவில்லை .கை  ரேகை வைத்தாலும் ரேகை சரியாக விழவில்லை .எனவே பொதுமக்கள் மிகவும் வருத்தத்துடன்  செல்கின்றனர் .தமிழக அரசு உத்தரவின்படி பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் ,கிருமிநாசினி ,சமூகஇடைவெளி கடைபிடிப்பதில்லை .இப்படி சூழ்நிலை ஏற்பட்டால் மீண்டும் கொரானா பரவ வாய்ப்புள்ளது .பொதுமக்கள் அனைவரும் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவதில்லை .முன்பு பொதுமக்கள் பேருந்தில் செல்லும் போது முக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே நடத்துனர் அனுமதித்தார் .இப்போது யாரும் கடைபிடிப்பதில்லை .பள்ளிகள் திறந்திருப்பதால் மாணவர்கள் பேருந்து படிகளில் தொங்கியபடி செல்கின்றனர் .நேரில் கண்ட நிருபர் ஓட்டுநர் ,மற்றும் நடத்துநர் அவர்களிடம் கேட்கும்போது நாங்கள் பார்க்கும்போது ஒழுக்கமாக தான் பயணம் செய்தார்கள் .சில மாணவர்கள் செய்யும் குற்றங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது .சில பலசரக்கடைகளிலும் துணிக்கடைகளிலும் ,முகக்கவசம் அணிவதில்லை.அனைத்து கிளைநூலகங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது . .செய்தியாளர் டிவி செய்திகேட்கும்போது ஒரு முக்கிய பிரமுகர் தொகுத்து வழங்குகிறார் .பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் முகக்கவசம் அணிந்து வருகின்றனர் அவர்களுக்கு கூறும் அறிவுரைகள் 6  மணி நேரம் அணிந்தால் நாம் சுவாசிக்கும் காற்று உள்ளே செல்கின்றது .இருப்பினும் பலவகையான நோய்கள் உருவாக்குவதற்கு வாய்ப்புள்ளது .எனவே அரசின் உத்தரவின்படி பொதுமக்கள் தயவு செய்து முகக்கவவசம் ,கிருமிநாசினி சமூக இடைவெளி பிடித்தல் அவசியம் இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர் .  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »