மின் அழுத்த குறைபாடு…. நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி தொடக்கம்….

உத்தமபாளையம்  –

உத்தமபாளையம்- தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து மின் பற்றாக்குறை அதிகரித்து வந்ததை கருத்தில்கொண்டு கம்பம் உத்தமபாளையம் சின்னமனூர் மின் உதவி செயற்பொறியாளர் கட்டுப்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மின்மாற்றிகள் 9 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணி மின்சார வாரியத்தின் மூலம் தற்போது தொடங்கியுள்ளது. 


கம்பம் பகுதி விவசாயிகள் கூறியது கம்பம் பள்ளத்தாக்கு முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. தென்னை, வாழை, திராட்சை மற்றும் காய்கறிகள் இப்பகுதியில் பெருமளவு பயிரிட்டு விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் குறைந்த மின் அழுத்த குறைபாட்டால் விவசாயத்திற்கு முறையாக தண்ணீர் பாய்ச்சுவதற்கு முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப் படுகின்றனர். மின்சார வாரியம் புதிதாக நூற்றுக்கு மேற்பட்ட   மின்மாற்றிகள் அமைப்பதின் மூலம் இப்பகுதியில் நிலவிவந்த மின் பற்றாக்குறை தீர்வு காணப்படும். விவசாயிகளுக்கு சீரான தடையில்லாத மின்சாரம் கிடைப்பதன் மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று அவர்கள் கூறினார்கள்.  
இப்பகுதியிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் மின் பற்றாக்குறை இல்லாமல் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என சின்னமனூர் கோட்ட பொறியாளர் ரமேஷ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »