திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை எஸ்.ஏ.எம். யூசுப்ராவுத்தர் திருமண மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒட்டன்சத்திரம் ஒன்றிய
9-வது மாநாடு நடைபெற்றது. மாவட்ட குழு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வ.ராஜமாணிக்கம், பி.வசந்தாமணி மாவட்ட குழு உறுப்பினர் எம்.ஆர்.முத்துச்சாமி, மாநாட்டு தலைமை குழு ஜி.பழனிச்சாமி, வி.சுமதி, ஆர்.ஆறுச்சாமி, மினிட்ஸ்குழு எம்.பழனிச்சாமி, டி.பாலசுப்பிரமணி, தீர்மானக்குழு பி.முருகேசன், எஸ்.மனோகரன், ஆர்.எஸ்.பெரியசாமி, தகுதி ஆய்வுக்குழு எம்.முருகேசன் என்.எஸ்.குமரகுருபரன், எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.
புதிய ஒன்றிய குழு செயலாளராக எஸ்.சிவமணி தேர்வு செய்யப்பட்டார். மேலும் புதிய கமிட்டி ஒன்றிய குழு உறுப்பினர்களாக எம்.முருகேசன், எம்.நாகேஸ்வரன், மண்டவாடி பி.முருகேசன், ஜி.பழனிச்சாமி, ஆர்.எஸ்.பெரியசாமி, எஸ்.மனோகரன், ஆர்.ஆறுச்சாமி, ஏ.முருகானந்தம், சி.முகமது ரபீக், எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மலை அடிவாரத்தில் உள்ள விவசாயிகளை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மலை அடிவாரத்தில் உள்ள அரசு நிலங்களில் சிறு நீர்த்தேக்க குட்டைகள் அமைக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்கெட்டில் விவசாயிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு இட வசதி செய்து தரவேண்டும் ஒட்டன்சத்திரம் 5-வது வார்டில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும். திடீர் நகர் பகுதிகளில் தொடர்ந்து தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்தை நடத்த வேண்டும் விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் ஆகிய தீர்மாணங்கள் ஒன்றிய மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.நாகேஷ்வரன் நன்றி கூறினார்.