மாதவரம் அருகே இருவேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் படுகாயம்.

கனகசத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்றிருந்த போது, பேருந்தில் வந்த மற்றொரு கல்லூரி மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவர்களை கிண்டல் செய்து, தகராறு செய்தனர். அப்பொழுது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கத்தி மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில் மாதவரம், கண்ணபிரான் கோயில் தெருவில் வசிக்கும் நிர்மல்குமார், வ/18, என்ற மாணவருக்கு பலத்த இரத்தக்காயம் ஏற்படவே, மற்ற கல்லூரி மாணவர்கள் தப்பியோடி விட்டனர். காயமடைந்த நிர்மல்குமாரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்ததின் பேரில், சிகிச்சை பெற்று வரும் நிர்மல் குமார் கொடுத்த புகாரின் பேரில், M-1 மாதவரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்ததில், சிகிச்சை பெற்று வரும் நிர்மல் குமார் வண்ணாரப்பேட்டையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதும், எதிர்தரப்பைச் சேர்ந்த மாணவர்கள், வியாசர்பாடியிலுள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது. அதன் பேரில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடியிலுள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 1.ஆசிப், வ/20, த/பெ.யாகத்அலி, செங்குன்றம், 2.மோகன் (எ) மோகன்ராஜ், வ/19, த/பெ.செந்தில்முத்து, மணலி, 3.தவசி, வ/20, த/பெ.கர்ணா, திருவள்ளூர் மாவட்டம், 4.தீனா (எ) தினேஷ், வ/20, த/பெ.சேகர், திருவள்ளூர் மாவட்டம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல காயமடைந்த வியாசர்பாடியிலுள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர் மோகன் (எ) மோகன்ராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், மற்றொரு வழக்குப்பதிவு செய்து, வண்ணாரப்பேட்டையிலுள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், 1.ராகேஷ், வ/20, த/பெ. மூர்த்தி, சோத்துபெரும்பேடு, சென்னை-67, 2.புஷ்பராஜ், வ/19, த/பெ.சேகர், சோத்துபெரும்பேடு, சென்னை, 3.விமல்ராஜ், வ/19, த/பெ.பழனி, சோழவரம், சென்னை-67 ஆகிய 3 நபர்களைகைதுசெய்தனர்.

மேலும், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்ற மாணவர்களை காவல் குழுவினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 7 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »