வருஷநாடு – தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன், மாவட்ட முழுவதும் குறைந்தது 2 லட்சம் நபர்களுக்கு கொரோனோ தடுப்பூசி போட வேண்டும், நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு பொதுமக்களும் முன்வர வேண்டும் என இரவு பகல் பாராது விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார், அனைத்து நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சிகளிலும் அரசுப் பணியாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் என அனைவரிடமும், நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு செய்றும்மாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஏற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலூகாவில் உள்ள மரிக்குண்டு கிராமத்தில் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்த முன் வரவேண்டும் என்று கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக நடைபெறும் கோவிட் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்துபவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு கடைசியாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மரிக்குண்டு இளைஞர்கள் சார்பாக பெண்கள் மூன்று நபர்களுக்கும் , ஆண்கள் முன்று நபர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது,