வருஷநாடு – வருஷநாடு ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் அதிகமாக கொட்டை முந்திரி, இலவ மரம் மாமரம் ஆகிய வருட வருமான மரங்களை வைத்து மகசூல் எடுத்து வந்தனர். இந்த மரங்களுக்கு அதிக தண்ணீர் தேவையில்லை என்ற காரணத்தினால் பண்ருட்டி சேலம் நகருக்கு இணையாக மனம் சார்ந்த நிலத்தில் இதனால் நடப்பட்டது. இடையில் போதுமான மழை இல்லாததாலும் இடுபொருள் முதல் மருந்து மற்றும் கூலி உயர்வால் பாதிக்கப்பட்டனர் வேலையாட்கள் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு செல்வதால் விவசாய பணிக்கு ஆட்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வருட மகசூல் என்பதால் மரம் பராமரிப்புக்கு தேவையான செலவுகள் செய்ய வெளியில் கடன் வாங்கியும் விவசாயம் செய்கின்றனர். ஆனால் போதுமான வருவாய் இல்லாததாலும் அரசு வழங்கும் பயிர் கடன் மற்றும் விவசாய கடன் சொட்டுநீர் பாசனம் மானியம் என இந்த மரங்களுக்கு அரசு மானியம் வழங்கவில்லை எனவும், அவ்வாறு வழங்கினால் ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் அதிகபட்சமாக இருப்பதால் இந்த மரங்களை வெட்டி விறகு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் விவசாய நிலங்கள் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது என்பது வேதனைக்குறிய செய்தியாக இருக்கின்றது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்