சிவபெருமான் சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கும் நாளான அஷ்டமி சப்பரம் – நான்கு வெளி வீதிகளில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஓம் நமசிவாயா ஹர ஹர மகாதேவா கோஷங்கள் முழங்க பவனி – சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கக்கூடிய கடவுளாக சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார்.
அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் சார்பாக மார்கழி மாதம் வரக்கூடிய அஷ்டமி சப்பரம் தினத்தன்றுஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சப்பரங்களில் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் இருந்து கீழ வெளி வீதி வடக்கு வெளி வீதி வெளி வீதி வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
அந்த வகையில் அஷ்டமி சப்பரத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் பிரியாவிடை மற்றும் ஸ்ரீ மீனாட்சி அம்மன்நான்கு வெளி வீதிகளில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பக்தர்களின் ஓம் நமசிவாயா சரண கோஷம் முழங்க பவனி வந்தனர். இதில் வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.