மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் – இல்லம் தேடி கல்வி குறுவளமையத் தன்னார்வளர்களுக்கு பயிற்சி வழங்க உள்ள மேல்நிலை, உயர்நிலை , தொடக்க நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்களுக்கான இரண்டு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி விராகனுர் புனித தெரசா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.
முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி நாதன் பேசும் போது , ” இல்லம் தேடிக் கல்வித் திட்டம் ஆசிரியர்களுக்கு உதவி செய்வதற்காகக் கிடைத்த வரபிரசாதம். கற்றல் இடைவெளியை குறைக்கவும், தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கும் உதவும் திட்டம் . மதுரை மாவட்டத்தை இடைநிற்றல் இல்லா மாவட்டமாக மாற்ற இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மனமகிழ் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் மாணவர்களைத் தினமும் பள்ளிக்கு வரச் செய்யலாம்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் நிறைய மனமகிழ் செயல்பாடுகள் மாணவர்களுக்கு வழங்க இருப்பதால் ஆசிரியர்கள் அற்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு இப்பயிற்சியை தன்னார்வலர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் பேசினார். கூடுதல் உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தினை ஆசிரியர்களிடம் அறிமுகம் செய்து விளக்கினார். திருமங்கலம் , உசிலம்பட்டி கல்வி மாவட்டம. மற்றும் மதுரை கல்வி மாவட்டத்தை சேர்ந்த 262_ ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கு கொண்டனர்.
இல்லம் தேடிக் கல்வியை மக்கள் இயக்கமாக மாற்றுவது குறித்தும், தன்னார்வலர்கள் பணிகள் குறித்தும் பயிற்சியில் விளக்கமளிக்கப்பட்டது. இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாடங்கள் கற்பித்தல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
கருத்தாளர்களாக தலைமையாசிரியர் க.சரவணன், பாலசுப்பிரமணி ஆசிரியர்கள் சி. அழகு முருகன் , அருள் ராஜா , அமுதா செல்வி , சுலைகா பானு , ஆசிரிய பயிற்றுநர் சந்திர சேகர், சிவராமன், மதன், பிச்சை ,ராஜ உடையார் , விரிவுரையாளர்கள் கருப்பசாமி , நச்ரின் ஆஷா இந்துமதி, சுகந்தா ஜெரால்டு ஆகியோர் கருத்தாளர்களாக பங்கு கொண்டனர். ஆசிரிய பயிற்றுநர்கள் ஜெசிந்தா நவீன், ஸ்டெல்லா ஷோபியா, செந்தில் வேல், சதீஷ் பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.