தென்தமிழகத்தில் வரவிருக்கும் தை மாதம் தொட்டு தொடர்ந்து ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, மஞ்சுவிரட்டு போன்ற எருதுவிடும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இதில் மதுரை மாவட்டத்தில் பெரும்பான்மையான கிராமப்புரங்களில் தொன்றுதொட்டு பாரம்பரியமாக இவ்விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்கம் சார்பில் மேலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வடமாடு காளை வளர்ப்போர், விழாக்குழுவினர், மாடுபிடி வீரர்கள் என 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னதாக மறைந்த வடமாடு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு விதிமுறைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
அதன்படி ஒரு நிகழ்ச்சிக்கு 12 மாடுகள் களமிறக்குவது. ஒரு காளைக்கு 9 மாடுபிடி வீரர்கள் வீதம் 25 நிமிடங்கள் போட்டி நடத்துவது என சங்கத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. மேலும் காளை வளர்ப்போர், விழா கமிட்டி, மாடுபிடி வீரர்கள் ஒருங்கிணைந்து வடமாடு மஞ்சுவிரட்டிற்கு என விதிமுறைகளை வரைப்படுத்தி சட்டமாக கொண்டுவர முயற்ச்சி மேற்கொள்வது போன்ற போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் வடமாடு நலச்சங்கத்தின் மாநில கௌரவ தலைவர் P.K.M.செல்வம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் Dr.P.ராஜசேகரன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வடமாடு நலச்சங்கம் சார்பில் செய்திருந்தனர்.